"அணுமின் நிலையம் + ரஷ்ய ஏவுகணை.." இஸ்ரேல் பிளானே இதுதான்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஈரான்.. பகீர்
டெல் அவிவ்: ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் சில காலமாகவே பதற்றமான ஒரு சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் என்றால் இப்போது ஈரான் இஸ்ரேல் இடையேயும் மோதல் வெடித்துள்ளது.

முதலில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை முறியடித்துவிட்டது.
பகீர் தகவல்: இதற்கிடையே இதற்கு இஸ்ரேல் மீண்டும் கடந்த வாரம் பதிலடி கொடுத்தது. ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் இஸ்ரேல் பெரியளவில் தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட ஒரு பகுதியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவும் கூட இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், இஸ்ரேல் அரசு இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. தொடர்ந்து மவுனமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.
"உக்கிரமாக பதிலடி கொடுப்போம்.." இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! பரபர
டார்கெட் எது: சர்வதேச ஊடகங்கள் இந்த தாக்குதல் தொடர்பான சாட்டிலைட் போட்டோக்களை ஆய்வு செய்துள்ளன. அதில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள இசஃபான் சர்வதேச விமான நிலையத்தின் வடகிழக்கு பகுதியில் ரஷ்யாவின் S-300 ஏவுகணைகள் இருப்பது அந்த சாட்டிலைட் படங்களில் தெளிவாகத் தெரிகிறது. சாட்டிலைட் படங்களில் இந்த S-300 இருப்பது தெளிவாகத் தெரிகிறது.. மேலும், Natanz என்ற அணுமின் நிலையமும் கூட இந்த தாக்குதல் நடந்த இடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

அணுமின் நிலையம்: இந்தளவுக்கு சென்சிடிவ்வான பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பிலும் ரேடாரிலும் சிக்காமல் இஸ்ரேல் அங்குத் தாக்குதலை நடத்தியுள்ளது இதில் உறுதியாகிறது. அதுவும் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை, அணுமின் நிலையம் ஆகியவை அமைந்துள்ள முக்கிய பகுதியைத் தாக்கியுள்ளது.
இருப்பினும், ஈரான் பெரியளவில் தாக்குதல் நடக்கவில்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகள் கூறுகையில், "ஈரானின் வான்வெளியில் எந்தவொரு பொருளும் நுழையவில்லை. மேலும், இங்கே இதுபோன்ற ஏவுகணை தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை" என்றே தொடர்ந்து கூறி வருகிறார்கள். சாட்டிலைட் படங்களில் தாக்குதலால் சேதம் ஏற்பட்டது உறுதியானாலும் அதை ஈரான் மறுத்தே வருகிறது.
ரேடார் சேதம்: இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதல் S-300 அமைப்பை குறிவைத்தே நடத்தப்பட்டது போலத் தெரிகிறது. இதனால் S-300 பாதுகாப்பு அமைப்பின் ரேடார் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதான் ஒரு தாக்குதலின் போது ஏவுகணைக்கு வழிகாட்ட முக்கியமானதாகும். இருப்பினும் ஏவுகணை அமைப்பில் எந்தவொரு பாதிப்பும் இல்லையாம்..
இருப்பினும், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் முழுமையான சேதம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் கூற மறுப்பதால் இஸ்ரேல் என்ன ஆயுதங்களைப் பயன்படுத்தின.. இதனால் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியாமலேயே இருக்கிறது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications