10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது கொடூர தாக்குதல்! மீண்டும் போர்?
பெய்ரூட்: ஈரான் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததது என நாம் நிம்மதி அடைவதற்குள்ளேயே வளைகுடாவில் மீண்டும் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. லெபனான் மீது ஈரான் மிக மோசமான ஒரு தாக்குதலை நடத்தியுள்ள சூழலில், அதில் குறைந்தது 254 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது அங்கு நிலைமையை மோசமாக மாற்றுகிறது.
வளைகுடாவில் இது கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த இந்த போரால் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகே நேற்றைய தினம் இந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவும் ஈரானும் வெளியிட்டது.

லெபனான்
இதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பில் ஈரான் மட்டுமின்றி லெபனான் உட்பட வளைகுடாவில் நடக்கும் அனைத்து தாக்குதலுமே நிறுத்தப்படும் எனப் பாகிஸ்தான் கூறியிருந்தது. இருப்பினும், இதை மறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனானுக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் கூறியது. வெறும் பேச்சு உடன் நிற்காமல் லெபனான் மீது தாக்குதலையும் ஈரான் ஆரம்பித்தது.
254 பேர் உயிரிழப்பு
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. வெறும் 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இந்த மிக மோசமான தாக்குதலில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டு, 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனோர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கான தேடுதல் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மிக பெரிய தாக்குதல்
லெபனான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட மிக பெரிய தாக்குதலில் ஒன்றாக இது இருக்கிறது. மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலைத் தொடங்கியுள்ளது. லெபனான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லை எனச் சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முதலில் நடந்த தாக்குதல் சைடா நகரின் ஒரு கஃபேயை தாக்கியது. அதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.. 22 பேர் காயமடைந்தனர். மற்றொரு ஏவுகணை பால்பெக்கில் இறுதிச் சடங்கில் நடந்த இடத்தை தாக்கியுள்ளது. அதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இப்படி பெரும்பாலான வான்வழித் தாக்குதல்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நடந்துள்ளது. இது பெரும் சேதத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தின. பல இடங்களில், மீட்புக் குழுக்கள் இடிபாடுகளை அகற்றிக் காயமடைந்தவர்களை மீட்டன.
மீண்டும் ஆரம்பிக்கும் போர்?
இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அவூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்தத் தாக்குதல்களை "மிருகத்தனமானது" என்று வன்மையாகக் கண்டித்தார். அவர், மேலும், "இன்று, இஸ்ரேல் மீண்டும் தனது ஆக்கிரமிப்பைத் தொடர்கிறது.. அமைதி முயற்சிகளையும் அப்பட்டமாக மீறி, ஒரு மிகப் பெரிய படுகொலையைச் செய்கிறது" என்று சாடியுள்ளார்.
இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால்.. தற்காலிக போர் நிறுத்தத்திலிருந்து ஈரான் விலக நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அங்கு நிலைமை எப்போது வேண்டும் என்றாலும் கையை மீறிச் செல்லும் என்றே அஞ்சப்படுகிறது.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications