உணவு இல்லை.. தண்ணீர் கூட இல்லை.. இஸ்ரேல் தாக்குதல்.. காஸாவில் ஒரே வாரத்தில் அகதிகளான 56000 பேர்!
ஜெருசலேம்: காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்கள் காரணமாக பாலஸ்தீன உள்நாட்டிற்கு உள்ளே அகதிகளாக இடம்பெறும் கொடூரம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
மே முதல் வாரத்தில் ஜெருசலேமில் தொடங்கி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாத தொழுகை நடத்தும் போது, உள்ளே புகுந்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதோடு ஜெருசலேம் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக பல லட்சம் யூதர்களை குடியமர்த்தி அங்கிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதில் மும்முரம் காட்டியது. இதுவே தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுக்க காரணம்.

இஸ்ரேல்
இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்து காஸாவில் இருக்கு பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான ஒரு மணி நேரம் கூட இடைவெளி விடாமல் இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பல்வேறு இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.

தாக்குதல்
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலாளில் 215க்கும் அதிகமாக பாலஸ்தீன மக்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 61 குழந்தைகள் அடக்கம். 36 பெண்கள் பலியாகி உள்ளனர். 2000 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். காஸாவின் அஸ்திவாரத்தை அசைக்கும் வகையில் இந்த முறை இஸ்ரேல் மூன்று விதமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மூன்று விதம்
அதன்படி இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தாக்குதல், ஹமாஸ் இயக்கத்தினர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வீடுகளில் தாக்குதல், ஊடகங்கள், பெரிய நிறுவனங்கள் உள்ள மாடி கட்டிடங்களில் தாக்குதல் என்று மொத்தமாக காசாவை அழிக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

மோசம்
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 58000 பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவில் மக்கள் இருக்கும் இடங்களில் இஸ்ரேல் தாக்குவதால் சொந்த நாட்டுக்கு உள்ளேயே அகதிகளின் காஸாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இவர்களுக்காக பல்வேறு பள்ளிகளில் ஐநா சார்பாக அகதிகள் முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அகதிகள் முகாம்
ஆனால் இந்த முகாமிற்கு வந்தவர்களிடம் சமைக்க உணவுகள், தானியங்கள் இல்லை. முகாமில் ஐநா சார்பாகவும் உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. போர் காரணமாக தண்ணீர் கூட கிடைப்பது. பல பெண்கள், குழந்தைகள் உடை கூட இல்லாமல் அவதிப்படும் கொடூரம் ஏற்பட்டுள்ளது. 56000 பேர் அடுத்தடுத்த பள்ளிகளில், நெருக்கமாக வகுப்பறைகளில் தூங்கி, அங்கேயே வாழும் கொடூரம் ஏற்பட்டுள்ளது.

காணவில்லை
பல்லாயிரம் பேர் இந்த இடப்பெயர்வில் காணாமல் போய்விட்டதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. காஸாவை சுற்றி பல வருடங்களாக இஸ்ரேல் blockcade போட்டு வைத்துள்ளது. அதாவது காஸாவின் அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் உலக நாடுகளிடம் இருந்து துண்டித்து உள்ளது. இதனால் காஸாவிற்கு மற்ற நாடுகள் உதவி பொருட்களை கொடுப்பதும் இயலாத காரியம் ஆகியுள்ளது.

உதவி
உலக நாடுகளிடமும், அந்த பக்கம் ஜெருசலேமில் உள்ள சக பாலஸ்தீன மக்களிடமும் காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் உதவி கேட்டு மன்றாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உதவ கூடிய எந்த வாய்ப்பையும் வழங்காமல் இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலை போலவே இனியும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

மோசம்
2014ல் நடந்த காஸா போரில் இஸ்ரேல் மூலம் 2100 பாலஸ்தீன மக்கள் காஸாவில் கொல்லப்பட்டனர். இதில் 1462 பொது மக்கள். மீதம் உள்ளவர்கள் மட்டுமே போராளி குழுவினர். வெறும் 50 நாளில் இத்தனை பேர் இஸ்ரேல் ராணுவம் 2014ல் கொன்றது. இந்த முறை பலி எண்ணிக்கை அதைவிட அதிகம் வரலாம் என்று உலக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications