7.20 நிமிட ஷார்ட் பிலிம்.. இஸ்ரேலை திணறடித்த 17 வயது சிறுவன்.. சுட்டுக்கொன்ற ராணுவம்.. பரிதாபம்!
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை சேர்ந்த 17 வயது ஒபைடா அக்ரம் என்ற சிறுவன் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
7.20 நிமிடம் ஓட கூடிய குறும்படம் அது... பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒபைடா அக்ரம் என்ற சிறுவன் இந்த படத்தில் நடித்து இருந்தார். இஸ்ரேல் ராணுவம் மூலம் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, சிறையில் கொடுமைகளை அனுபவித்துவிட்டு ஒபைடா அக்ரம் விடுவிக்கப்பட்டார்.
தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளை, தன்னுடைய மற்ற சிறுவர்கள் பட்ட கஷ்டங்களை ஒபைடா அக்ரம் அந்த குறும்படத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஒபைடா என்ற பெயரில் இந்த படம் யூ டியூபில் வெளியாகி சர்வதேச அளவில் பேசப்பட்டது.

இஸ்ரேல்
இந்த படம் குறித்து பார்க்கும் முன் சிறிய பின்னணி.. பாலஸ்தீனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமிக்க தொடங்கியதில் இருந்தே அங்கு இஸ்ரேல் ராணுவம் மூலம் பல பாலஸ்தீன சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். வெளியே கடைக்கு செல்லும் இளைஞர்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் என்று யாரை பார்த்தாலும் இஸ்ரேல் ராணுவம் கைது செய்வது வழக்கம்.

ஏன் கைது
இவர்கள் காஸாவின் ஹமாஸில் சேர கூடாது, இஸ்ரேல் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய கூடாது என்று பல்வேறு காரணங்களுக்காக இப்படி இஸ்ரேல் ராணுவம் கைது செய்கிறது. பாலஸ்தீன சிறுவர்களை கைது செய்வதோடு, சிறிய சிறிய முகாம்களில் அடைத்து, மோசமாக இவர்களை தாக்கி கொடுமை படுத்துவதும் கூட நடக்கிறது. உலக நாடுகள் இந்த குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தட்டிக்கேட்காத நிலையில்தான் ஒபைடா அக்ரம் நடித்த அந்த ஒபைடா குறும்படம் 2019ல் வெளியானது.

அதிர்வு
சர்வதேச அளவில் இந்த குறும்படம் பெரிதாக எல்லா மக்களுக்கும் சென்று சேரவில்லை என்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள், ஐநா அமைப்பினர் இடையே ஒபைடா குறும்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மளிகை கடைக்கு செல்லும் போதும் தான் செய்து செய்யப்பட்டதையும், அதன்பின் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதையும் ஒபைடா அக்ரம் இந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.
|
பாலஸ்தீனம்
பாலஸ்தீனத்தில் வசிப்பது எவ்வளவு கொடுமையானது என்று இந்த உருக்கமான வீடியோவில் ஒபைடா அக்ரம் குறிப்பிட்டு இருந்தார். இஸ்ரேலை இந்த வீடியோ கோபப்படுத்திய நிலையில் மீண்டும் ஒபைடா அக்ரம் 2020ல் கைது செய்யப்பட்டார். 4-5 மாதங்கள் சிறையிலும் கஷ்டப்பட்டு வெளியே வந்தவர், கல்லூரிக்கு சென்று சமையல்கலை தொடர்பாக கடந்த 2 வருடமாக படித்து வந்தார்.

கொலை
அதன்பின் மீண்டும் கைது செய்யப்பட்ட ஒபைடா அக்ரம் சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ஒபைடா அக்ரம், தனது கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி, பட்டத்திற்காக காத்திருந்த நிலையில்தான் நேற்று காலை இஸ்ரேல் ராணுவத்தினர் இவரின் இருப்பிடத்திற்கே சென்று மோசமாக தாக்கி உள்ளனர்.
|
கேம்ப்
ஜெருசலேமில் வெஸ்ட் பேங்கில் உள்ள அல் அர்ருப் என்ற அகதிகள் முகாமில் தங்கி இருந்த ஒபைடா அக்ரமை, கைது செய்து, இதயத்தில் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அதோடு இந்த கேம்பிற்கு ஆம்புலன்ஸ் வராத வகையில் பாதைகளை தற்காலிகமாக அடைத்து உள்ளனர். நெஞ்சில் சுடப்பட்ட ஒபைடா அக்ரம் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி உள்ளார்.

போராட்டம்
நீண்ட நேரம் உயிருக்கு போராடிய பின் இவர் பலியானதாக டிபன்ஸ் பார் சில்ட்ரன் என்ற சர்வதேச பாலஸ்தீன அமைப்பு கூறியுள்ளது. இவரின் மரணம் பாலஸ்தீன மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக பாலஸ்தீன இளைஞர்கள் ஒபைடா அக்ரம் கொலையால் கொதித்து போய் உள்ளனர்.

ஷார்ட் பிலிம்
இவரின் குறும்படம் மீது இஸ்ரேல் கோபமாக இருந்தது. இதனால்தான் மூன்று முறை ஒபைடா அக்ரமை கைது செய்தது. தற்போது ஹமாஸ் மோதலை பயன்படுத்திக்கொண்டு நேரம் பார்த்து இவரை கொன்றுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இவரோடு இதே கேம்பில் தங்கி இருந்த வேறு 3 சிறுவர்களும் கடந்த சில தினங்களாக இஸ்ரேல் ராணுவம் மூலம் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications