‛‛போர் இப்போதைக்கு முடியாது’’.. காசாவில் உதவியின்றி தவிக்கும் மக்கள்.. இஸ்ரேல் சொன்ன பகீர் தகவல்
இஸ்ரேல்: ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதனால் காசா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம்காலமாக மோதல் நடந்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அமைத்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அதிரடி தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கினர்.
இதில் 1,000க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 200க்கும் அதிகமானவர்கள பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தது. காசாவின் மீது இஸ்ரேல் ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் பலியாகினர். தற்போது காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாகவும், இன்னும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
11 வாரங்கள் கடந்தும் இன்னும் போர் நிற்கவில்லை. இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தினாலும் ஹமாஸ் அமைப்பை அழித்த பிறகு தான் போர் நிற்கும் எனும் வகையில் அந்நாடு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே போருக்கு நடுவே காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல நாடுகள் உதவிகள் வழங்கி வருகின்றன. காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்கு அனைத்து வகையான உதவிகள் கிடைக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா வலியுறுத்தியது. இதற்கிடையே தான் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவிடாமல் இஸ்ரேல் தடுப்பதாக ஐநாவில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை ஐநா மன்றம் மிகவும் சீரியஸான விஷயமாக கருதியது.
இந்நிலையில் தான் இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹாஹரி கூறியதாவது: காசாவில் மனிதாபிமான அடிப்படையில் கூடுதல் உதவிகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகளாவிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. தற்போது காசாவில் கட்டுப்படுத்தப்பட்ட வரம்புகள் என்பது உள்ளது. இருப்பினும் இந்த வேளையில் நாங்கள் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எங்களது போர் என்பது ஹமாசுக்கு எதிரானது தான். காசா மக்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் காசா மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில் நாங்கள் தடையாக இல்லை.
மேலும் காசா மக்களுக்கு கூடுதல் உதவிகள் கிடைக்க சர்வதேச அமைப்புகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக மருத்துவமனைகள், தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க உதவுவது பற்றி யோசிக்க வேண்டும். அதேவேளையில் ஹமாஸை தோற்கடித்து எங்கள் நாட்டில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பணையக்கைதிகளை மீட்பது என்பது தான் எங்களின் முக்கிய பணியாக உள்ளது. பணைய கைதிகளை பாதுகாப்பாக மீட்பது பு மற்றும் கசாவை சுதந்திரமாக விட்டு செல்லும் பணிகளை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்'' என்றார்.
மேலும் தற்போதைய சூழலில் காசா மீதான போர் முடிவுக்கு வர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என இஸ்ரேல் தரப்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் காசாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலைமை என்பது இன்னும் மோசமாக வாய்ப்புள்ளதால் சர்வதேச அமைப்புகள் கவலையடைந்துள்ளன.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications