"ஸ்பெஷல் பவர்!" யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்.. ஹமாஸை வேட்டையாட தனி கமாண்டோ படையை இறக்கிய இஸ்ரேல்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் படையை அழித்தொழிக்க இஸ்ரேல் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஹாமஸ் படை கடந்த அக்டோபர் 7 நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இப்போது இறங்கியுள்ளது.

காசா பகுதியில் இருக்கும் பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பும் இப்படி மாறி மாறி தாக்கிக் கொள்வதால் அங்கே பரபர சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகிறது.
சிறப்புப் படை: இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை ஷின் பெட் என்ற அமைப்பு கவனித்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடவும் முழுமையாக அழிக்கவும் ஷின் பெட் அமைப்பு புதிதாகச் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படைக்கு 'நிலி' என்ற பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'நிலி' என்றால் ஹீப்ரு மொழியில் 'இஸ்ரேல் பொய் சொல்லாது' என அர்த்தமாகும்.
கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடித்துக் கொல்வது இந்த பிரிவு நோக்கமாகும். அன்றைய தினம் இஸ்ரேலுக்கு ஊருடுவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவின் ராணுவப் பிரிவில் உள்ள சிறப்பு கமாண்டோ பிரிவான நுக்பா வீரர்களை வேட்டையாடுவதே இந்த நிலி பிரிவின் நோக்கமாகும்.
வேட்டையாடச் சிறப்பு கமேண்டோ: இந்த புதிய சிறப்புப் படை மற்ற பிரிவின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாது. இவர்கள் சுயமாகச் செயல்படுவார்கள் என்று தெரிகிறது.. இதன் மூலம் தாக்குதல்களை விரைவாக நடத்த முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்போர்.. முக்கியமான பயங்கரவாதிகள் ஆகியோரை வேட்டையாடுவதே இந்த நிலி குழுவின் பிரதான நோக்கமாகும். உளவுத் துறை மற்றும் களத்தில் இறங்கி வேலை செய்யும் கமேண்டோ வீரர்கள் என இரு தரப்பு வீரர்களும் இந்த பிரிவில் இருக்கும்.
கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தொடர்ச்சியாகக் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் காசா மீது முழு வீச்சில் படையெடுக்க ரெடியாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள்: முன்னதாக கடந்த சனிக்கிழமை தான் (அக்டோபர் 14), இஸ்ரேல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ஹமாஸின் நுக்பா பிரிவில் உள்ள தளபதி அலி காதியை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. மறுநாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றொரு முக்கிய ஹமாஸ் பிரமுகரான பில்லால் அல் கேத்ரா என்பவரைச் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னரும் ஹமாஸ் படைகளைக் குறிவைத்து காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தது தாக்குதலை நடத்தி வருகிறது. மிக விரைவில் காசா மீது படையெடுக்க ஏதுவாக எல்லையில் அவர்கள் சிறப்பு ராணுவ தளங்களையும் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications