லெபனான் பங்கரை.. சோதனையிட்ட இஸ்ரேலுக்கு ஷாக்.. தோண்ட தோண்ட தங்கம், டாலர்.. பல்லாயிரம் கோடியாம்!
டெஹ்ரான்: பெய்ரூட் மருத்துவமனையின் அடியில் ரகசிய ஹெஸ்புல்லா நிதி மையம் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உளவுத்துறை தகவல்களை இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்ட உளவுத்தகவலின்படி, பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் பணம் மற்றும் தங்கம் இருந்தது. இது ஹெஸ்புல்லா குழுவின் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த நிதியை கைப்பற்றி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் ஹெஸ்பொல்லாவின் நிதி சோர்ஸ்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பின் பொருளாதார சோர்ஸ்கள் பல அழிக்கப்பட்டன. அதன் ஒரு கட்டமாக பெய்ரூட் மருத்துவமனையின் அடியில் இருந்த ரகசிய ஹெஸ்புல்லா நிதி மையம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹசன் நஸ்ரல்லாவின் பதுங்கு குழியில் மில்லியன் டாலர்கள் தங்கமும் பணமும் உள்ளது. பதுங்கு குழி நேரடியாக பெய்ரூட்டின் மையத்தில் அல்-சஹேல் மருத்துவமனையின் கீழ் அமைந்துள்ளது. இதை எங்கள் உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து உள்ளோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது. இந்த பகுதியை இன்னும் இஸ்ரேல் தாக்கவில்லை. விரைவில் அந்த இடத்தை தாக்குவோம். உள்ளே இருக்கும் பணம் மற்றும் தங்கத்தை அழிப்போம். இந்த பணத்தை வைத்து அவர்கள் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதை அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது.
தாக்குதல் பிளான்: ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிடனின் இந்த கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார்.
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தருவோம்.. ஆனால் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை ஆதரிக்கப் போவதில்லை என்று அதிபர் ஜோ பிடன் பிரதமர் நெதன்யாகுவிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளாராம். பிடன் மற்றும் நெதன்யாகு சமீபத்தில் போனில் பேசியபோது, இதை பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.
உதவிய அமெரிக்கா: ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பென்டகன் வெளியிட்டு உள்ளது.
பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க உதவும் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அந்த நாட்டிற்கு அனுப்பி உள்ளது. THAADயை இயக்கும் பேட்டரி உள்ளிட்ட உபகரணங்கள் அதனுடன் தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை அளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications