உக்கிரமாக மோதும் இஸ்ரேல் - ஈரான்: இருநாடுகளின் ராணுவ பலம் என்ன? யாருக்கு வலிமை அதிகம்
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் உச்சம் அடைந்து உள்ளது. டெஹ்ரானில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான ராணுவ பலம் குறித்த ஒப்பீட்டை பார்க்கலாம்.
ஈரானும், இஸ்ரேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்குடன் உள்ளன. இந்த சூழலில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போரை அடுத்து இந்த மோதல் மேலும் உச்சம் தொட்டது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாக்கள் இறங்கியதால், ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் ஈரான் போர்
இந்த அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதால், இஸ்ரேல் மீது ஈரானும் கடும் கோபம் அடைந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபரில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே எப்போது மோதல் வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், ராணுவத்துக்கு சொந்தமான சுரங்க தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன், ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தி இருந்தது.
இரு நாடுகளின் ராணுவ பலம்
200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் முழுவதும் குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இப்படி இருநாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் உச்சம் தொட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்து பார்க்கலாம்.
வீரர்களின் எண்ணிக்கை:
* ஈரானிடம் 6 லட்சம் படை வீரர்கள் உள்ளனர். இது இஸ்ரேலை காட்டிலும் 6 மடங்கு அதிகம்.
ஈரானில், 3,50,000 ராணுவ வீரர்களும், 1,90,000 வீரர்கள் ஐ.ஆர்.ஜி.சியிலும், 18,000 வீரர்கள் கடற்படையிலும், 37,000 வீரர்கள் விமானப் படையிலும் உள்ளனர். வான் பாதுகாப்பில்15,000 பேரும் உள்ளனர்.
* இஸ்ரேலை பொறுத்தவரை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர். அதில், ராணுவத்தில் 1,26,000 வீரர்களும், கடற்படையில் 9,500 வீரர்களும், விமானப் படையில் 34,000 வீரர்கள் உள்ளனர்.
வான் பாதுகாப்பில் யாருக்கு பலம்
வான் பாதுகாப்பை பொறுத்தவரை இஸ்ரேலிடம் அயர்ன் டோம், ஏரோ அமைப்புகள் உள்ளிட்டவை உள்ளன. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முதுகெலும்பாக உள்ளது. குறுகிய தொலைவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் வானிலேயே இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது.
இதுபோக இஸ்ரேலிடம் டேவிட் ஸ்லிங் என்ற வான்பாதுகாப்பு அமைப்பு உள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து இது உருவாக்கப்பட்டது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு நீண்ட தூர ராக்கெட்டுகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிடும்.
அணு ஆயுதங்கள்
அணு ஆயுதங்கள் என எடுத்துக்கொண்டால் இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈரானிடம் எவ்வளவு உள்ளது என மதிப்பிட முடியவில்லை. எனினும், ஈரானிடம் மேம்பட்ட அணுசக்தி திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஈரானிடம் ஷஹாப் 3, Fateh-110, Sejjil, போன்ற ஏவுகணைகள் உள்ளன. திட எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட ஏவுகணையும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 300 கி.மீட்டரில் இருந்து 3 ஆயிரம் கி.மீட்டர் தொலை வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது.
ஈரானிடம் டிரோன்களும் அதிக அளவு உள்ளன. Shahed-136, Mohajer-6, and Ababil-3 போன்ற டிரோன்கள் உள்ளன. இவை கண்காணிப்பு மற்றும் எதிரி நாடு மீது தாக்குதல் பணிக்காக பயன்படுத்த முடியும். இந்த டிரோன்களை ரஷ்யாவுக்கு சப்ளை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஈரானிடமே அதிக வீரர்கள், ஆயுதங்கள்
இஸ்ரேல் - ஈரான் ஆயுத பலத்தை ஒப்பிடும் போது ஈரானே அதிக அளவில் ஆயுதங்கள், வீரர்களை கொண்டு இருப்பதாக தெரிகிறது. எனினும், இஸ்ரேலிடம் அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளதாக சொல்லபடுகிறது. அது மட்டும் இன்றி இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு உள்ளது.
ஈரானுக்கு லெபனான், ரஷ்யா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளன. எனினும், அமெரிக்கா போன்ற வலுவான நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது கவனிக்கத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications