போனை பார்த்தால் ஷாக்.. இஸ்ரேலின் டாப் தலைகளுக்கு.. ஈரான் அனுப்பிய தரமான மெசேஜ்.. லிஸ்ட்லயே இல்லையே
டெஹ்ரான்: இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Knesset members) சிலர் இன்று ஈரானியர்களிடமிருந்து மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுள்ளனர். பலரின் போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போனுக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரான் மிரட்டல் அழைப்பு
இஸ்ரேலின் நாடாளுமன்றம் " Knesset " ஆகும். இது 120 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டமியற்றும் அமைப்பு. இவர்கள் சட்டங்களை இயற்றி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார்கள். இஸ்ரேலிய அரசியலில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் உறுப்பினர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்கள். ஈரான் மீதான போருக்கு ஒப்புதல் அளித்தது இவர்கள்தான்.
ஜூன் 18, 2025 நிலவரப்படி, ஈரானியர்களிடமிருந்து வந்த மிரட்டல் அழைப்புகள் தொடர்பான சமீபத்திய தகவல்கள் ஆங்கில ஊடகங்களில் உறுதியாகவோ அல்லது முழுமையாகவோ சரிபார்க்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது ஈரான்-இஸ்ரேல் பதட்டங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம். எனினும், இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவைப்படுகின்றன.
ஈரானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பிலும், எஸ்எம்எஸ்ஸிலும்.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு செய்தி அனுப்பப்பட்டது, அதில் "நீங்களே உங்கள் கல்லறையைத் தோண்ட தொடங்கிவிட்டீர்கள்.. தயாராக இருங்கள்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் அழைப்பு சம்பவம் இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் அதிரடி
ஈரான் இஸ்ரேல் போரில் தொடர்ந்து ஈரான் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலை விட ஈரான் கையே இதில் ஓங்கி உள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடையக்கூடும் என்ற நிலையில், அமெரிக்க ராணுவம் சுமார் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி உள்ளது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கும் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ஈரானை தாக்குவோம் என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பான ஃபோர்டோ அணு ஆலையை அமெரிக்கா தாக்கினால், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு விரைவான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கக்கூடும்.. நாம் தாக்கினால் அவர்கள் உடனடியாக அமெரிக்க தளவாடங்களை தாக்குவார்கள்.. இதனால் நிலைமை கைமீறும் என்று எச்சரித்துள்ளனர்.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications