எல்லாமே மாறுதே? அமெரிக்கா, பிரான்சை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக கனடா சொன்ன வார்த்தை! கதறும் ஹமாஸ்
இஸ்ரேல்: காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் அமெரிக்கா, பிரான்சை தொடர்ந்து இஸ்ரேலுக்கு சாதகமாக கனடாவும் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 7 ம்தேதி திடீரென ஹமாஸ் தீவிரவாதிகள் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது தான் இதற்கு காரணமாகும்.

தற்போது இந்த போர் என்பது 3வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் மற்றும் காசா என இருதரப்பையும் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதோடு 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில்தான் கடந்த 17 ம் தேதி காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதில் தற்போது வரை 471 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குலை நிகழ்த்தியது யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதாவது ராக்கெட் ஏவி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான் என ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பே இந்த தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் மீது பழிபோடுகிறது. ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் திசைமாறி மருத்துவமனை மீது விழுந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் தான் காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கனடா முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேயர் கூறியதாவது: அக்டோபர் 17 ம் தேதி காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைத்து கனடா மிகுந்த வருத்தமடைந்துள்ளது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
காசாவில் அல்-அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாக இருக்க முடியாது. இதுதொடர்பாக கனடாவின் பாதுகாப்பு துறையின் உளவுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காசாவில் இருந்து ஏவப்பட்ட தவறான ராக்கெட்டால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கலாம். '' என தெரிவித்துள்ளது. இதன்மூலம் காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்பதை கனடா உறுதி செய்துள்ளது.
முன்னதாக இந்த தாக்குதல் குறித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதனை தான் தெரிவித்து இருந்தது. அதாவது காசாவில் மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. அதன் பின்னணியில் வேறு குழு இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர். அதன்பிறகு பிரான்சும் கூட இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை. பாலஸ்தீனத்தில் இரந்து தவறாக திசைமாறி வந்த ராக்கெட் மருத்துவமனை மீது விழுந்து இருக்கலாம் என தெரிவித்து இருந்தது. அந்த வகையில் தற்போது கனடாவும் இஸ்ரேலுக்கு சாதகமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இதனை ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications