அமெரிக்காவை அதிகாரப்பூர்வமாக போருக்கு அழைத்த இஸ்ரேல்.. கவனிக்கும் ரஷ்யா.. உலகப்போராகும் அபாயம்!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் மீதான தாக்குதலில், முக்கியமாக ஈரானின் அணு மையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல்.

ஈரானின் ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் தளத்தை அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலிடம் போதுமான பதுங்கு குழி தகர்ப்பு வெடிகுண்டுகளோ அல்லது பெரிய குண்டுவீச்சு விமானங்களோ இல்லை. ஃபோர்டோவ் தளம் மலையின் கீழ் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ஈரானுக்கு பறந்து சென்று தாக்கக்கூடிய விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளன.

Israel Iran

டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் நடவடிக்கையிலிருந்து இதுவரை விலகியே உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்தாலும்.. நாங்கள் இந்த தாக்குதலுக்கு உதவவில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை என்று அமெரிக்கா உறுதியாக கூறி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல். ஈரான் மீதான தாக்குதலில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்யும் பட்சத்தில் அது உலகப்போராக வெடிக்கும் அபாயங்கள் உள்ளன.

இந்த விவகாரம் மிகப்பெரிய போராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் லயன்' தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் மிக மோசமானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனம்

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாக ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இப்பிராந்தியத்தில் இதன் விளைவுகள் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. ரஷ்யா, ஈரானில் மிக மோசமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளனர்.

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலை ரஷ்யா கடுமையாக கண்டித்தது. ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti, இந்த தாக்குதலை கடுமையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியது. மேலும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் அதிகாலை தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவுவது கவலை அளிக்கிறது. இஸ்ரேல் அரசு வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா. சாசனத்தை மீறி ஈரான் மீது இஸ்ரேல் படைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.

இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் எல்லைக்குள் அதிரடி தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளது. அவசர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானின் கோரிக்கையை ஆதரித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+