"சர்வ நாசம்.." பெரிதாக திட்டம் போடும் இஸ்ரேல்! இது மட்டும் நடந்தால் அவ்வளவுதான்! எல்லாம் போச்சு

Subscribe to Oneindia Tamil

அவிவ்: இஸ்ரேல் ராணுவத்தைச் செயல்பாடுகளைப் பார்க்கும் போதே அவர்கள் அடுத்து பெரிதாக எதையோ பிளான் செய்வது புரிகிறது. இது நிச்சயம் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேல், ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இப்போது பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவுகிறது.

 Israel Planning Something Big that will turn entire middle east into conflict zone

இஸ்ரேல் படைகளின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்கள் பெரிதாக ஏதோ ஒன்றை பிளான் செய்வது திட்டவட்டமாகத் தெரிகிறது. இப்போது வரை அவர்கள் காசா பகுதியின் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி வருகின்றனர். மேலும், காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் படைகள் அங்கே தண்ணீர், உணவு மின்சாரம் ஆகியவற்றின் சப்ளையை கட்டுப்படுத்துகிறது.

பெரிய பிளான்: ஹமாஸ் படையினர் தாக்குதலுக்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இப்போது வரை இஸ்ரேல் தனது போர் விமானங்களை வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசா எல்லையில் நடக்கும் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது இஸ்ரேல் அடுத்து தரைவழியாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளது. இஸ்ரேல் தனது முழு ராணுவத்துடன் காசா மீது படையெடுக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், இதில் சில சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. காசாவின் அடர்த்தியான ஜனத்தொகை, குழப்பும் சுரங்கப்பாதை ஆகியவை தரை வழி தாக்குதலை சிக்கலானதாக மாற்றும். அதேபோல ஹமாஸ் படையிடம் இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக இருப்பதால் இஸ்ரேல் இதுபோன்ற பெரிய தாக்குதல் முடிவை எடுக்கும் முன்பு பல முறை யோசித்தாக வேண்டி இருக்கிறது.

வாய்ப்பு அதிகம்: இது தொடர்பாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் சிஐஏ இயக்குநருமான லியோன் பனெட்டா கூறுகையில், "இங்கே பிரச்சனை என்னவென்றால், காசாவிற்குள் நுழைந்தால் மக்கள் குடியிருக்கும் தெருக்களில் தான் மோதல் நடைபெறும். அப்படி நடந்தால் பாதிப்புகளும் இழப்புகளும் மிக மிக மோசமாகவே இருக்கும். ஆனால் மறுபுறம், இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் ஹமாஸ் படை நசுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்" என்றார்.

இப்படிப் படையெடுப்பு நடந்தால் உயிரிழப்புகள் உச்சம் தொடும். மேலும், இதன் மூலம் இஸ்ரேலால் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்பதிலும் கேள்வி இருக்கிறது. இஸ்ரேல் அப்படிச் செய்தால் அண்டை அரபு நாடுகள் உடனான உறவு மேலும் சிக்கலானதாக மாறும். அதன் பிறகு இஸ்ரேல்- ஹமாஸ் படை மோதல் என்பது அங்கே பிராந்திய போராக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

மிக மோசமான பாதிப்பு: இந்த படையெடுப்பு நடந்தால் கடந்த 2004இல் ஈராக்கில் பல்லூஜாவில் ஏற்பட்டது போலப் போர் மிக மோசமாக இருக்கும். ஒவ்வொரு வீதியிலும் இரு தரப்பும் மோதிக் கொள்ளும் மோசமான நிகழ்வுகள் ஏற்படும். மேலும், அரபு நாடுகளின் ஆதரவு முழுமையாக காசாவுக்கு இருப்பதால் படையெடுப்பு நடந்தால் அது அந்த பிராந்தியத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் காசாவுக்குள் படைகளை அனுப்பப் போவதாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நமது எதிரிகளை நாம் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு நாம் செய்யும் காரியம் என்பது தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும்" என்று எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார்.

இஸ்ரேல் பிளான் என்ன: இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாடுகளைப் பார்த்தாலும் அவர்கள் ஏதோ பெரிதாக பிளான் செய்வது புரிகிறது. இஸ்ரேல் ஏற்கனவே காசா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பல ஆயிரம் வீரர்கள் தங்க ஏதுவாக காசாவுக்கு மிக அருகிலேயே அதன் ராணுவ தளத்தையும் அமைத்து வருகிறது.

அங்கே பல ஆயிரம் ராணுவ வீரர்கள் தங்க முடியும். இஸ்ரேல் ஏற்கனவே மூன்று லட்சம் வீரர்களைத் திரட்டிவிட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுக்க வாய்ப்பு அதிகம் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+