போர் நிறுத்தம்.. ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல்! பணயக்கைதிகளின் விடுதலை தாமதமாகிறது
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவருவதால் பணயக்கைதிகளின் விடுதலை தாமதமாகலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, காசாவுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து நிறுத்தி வருவதால், ஹமாஸ் தரப்பு பணயகைதிகளை ஒப்படைக்க தாமதம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவ உதவிக்கான வாகனங்கள் 12,000 காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 8500தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தினமும் 50 பெட்ரோல், டீசல் டேங்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 15 என்கிற எண்ணிக்கையில்தான் இவை அனுமதிக்கப்படுகின்றன. தற்காலிக வீடுகள் 60,0000 உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஒன்றுகூட அமைக்கப்படவில்லை. குடிசைகள் 2 லட்சம் தேவை. ஆனால் வெறும் 20,000 மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆக இவற்றையெல்லாம் ஏன இஸ்ரேல் அனுமதிக்கவில்லை? இப்படி செய்வதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என ஹமாஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் மறுபுறம் இஸ்ரேல் வேறு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதாவது 2ம் கட்ட போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் எனில், ஹமாஸ் தலைவர்கள் காசாவை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும். Al-Qassam Brigade எனும் அமைப்பை கலைக்க வேண்டும், இஸ்ரேலின் மீதமிருக்கும் 76 பிணைய கைதிகளை விடுவிக்க உத்தரவாதம் தர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் சிறையில் மோசமான நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பற்றியோ, போதுமான உணவு பொருட்களை உள்ளே அனுப்பாமல் தடுத்து வைத்திருப்பது குறித்தோ இவர் எதுவும் குறிப்பிடவில்லை. இன்றும் கூட 10 பாலஸ்தீனர்களை இஸ்ரேலின் ஸ்னைப்பர் குழு கொலை செய்திருக்கிறது என்று ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் இருக்கும் பணயகைதிகளை விடுவிக்க கூடுதலான நாட்களை எடுத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பாதிக்கப்படப்போவது இஸ்ரேல் மக்கள்தான். தங்கள் உறவினர்களை உடனடியாக மீட்டு கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் தெருவில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.
போதாத குறைக்கு காசாவை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கதை அளந்து வருகிறார். சரி காசாவை வாங்கிக்கொண்டால் அம்மக்களை அமெரிக்கர்களாக ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர்களை அமெரிக்காவில் தங்க வைக்கிறீர்களா? என்று கேட்டால், அமெரிக்காவுக்கும் காசாவுக்கும் தூரம் அதிகம் எனவே, காசாவுக்கு பக்கத்திலேயே எங்காவது தங்க வைத்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications