பாலஸ்தீனத்துடன் போர் நிறுத்தம்.. இஸ்ரேல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
டெல் அவிவ்: ஹமாஸை அழிக்கிறோம் என்று கூறி, பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருந்தது. உலகம் முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தை இஸ்ரேல் தனது அமைச்சரவையில் நிறைறே்றியிருக்கிறது.
இந்த போர் நிறுத்தம் காரணமாக, ஹமாஸ் தன் வசம் இருக்கும் இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்கும். அந்த வகையில் இந்த போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

போருக்கான காரணம் என்ன?:
இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கு அடிப்படை காரணம் வழக்கம்போல அமெரிக்காதான். உலகின் எங்கு போர் நடந்தாலும் அதற்கான மூல காரணமாக அமெரிக்கா இருக்கிறது. அந்த வகையில், இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதற்கு பின்னால் இருந்ததும் அமெரிக்காதான். அமெரிக்காவின் ஆதரவுடன் மத்திய கிழக்கில், பாலஸ்தீனத்தை இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. இதற்கு எதிராக கேள்வி கேட்க மக்கள் மீது அடக்குமுறையும் ஏவப்பட்டது.
பதிலுக்கு இஸ்ரேலுக்கு எதிராக உருவானதுதான் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளாகும். இந்த அமைப்புகளில் சில ஆயுதம் ஏந்தியும், சில அரசியல் தளத்திலும் நின்று இஸ்ரேலுக்கு எதிராக சண்டை செய்தன. இதில் ஹமாஸ் எனும் அமைப்பு இரண்டு தளத்திலும் சண்டை செய்தது. எனவே இந்த அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியுள்ளன.
ஹமாஸ் நடத்திய தாக்குதல்:
பொறுத்து பொறுத்து பார்த்த ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் மீது சரமாரியாக குண்டுகளை வீசிய ஹமாஸ், சிலரை பணய கைதிகளாகவும் பிடித்து கொண்டு வந்தது. இதுதான் இப்போது நடக்கும் போருக்கான முக்கிய காரணம். ஹமாஸ் தாக்குதலை காரணம் காட்டி இதுதான் சாக்கு என்று, இஸ்ரேல் போரை அறிவித்தது. உடனே அமெரிக்காவின் வெடிகுண்டுகள் இஸ்ரேலில் வந்து தரையிறங்கின.
ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டடை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் குண்டுகள் பாலஸ்தீனத்தில் வீசப்பட்டன. இதனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 45000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
போர் நிறுத்தம்:
இந்த போரையும், போர் ஏற்படுத்திய பாதிப்புகளையும் பார்த்துக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், போருக்கு எதிராக குரலெழுப்ப தொடங்கின. குறிப்பாக போருக்கு ஆதரவாக நின்ற அமெரிக்காவில் மாணவர்களும், இடதுசாரி இயக்கங்களும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க தொடங்கின. இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆயிரம் ஆயிரமாக மக்கள் பேரணிகளை நடத்தினர். இத்தகைய போராட்டங்கள் அமெரிக்க அரசை போருக்கு எதிராக பேசவைத்தது.
பின்னர் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஐநா சபையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றபட்ட பின்னரும் கூட அதை மதிக்கா இஸ்ரேலும், அமெரிக்காவும் போராட்டங்களை பார்த்து போர் நிறுத்தத்தை அறிவித்தன. இது தொடர்பான தீர்மானம் தற்போது இஸ்ரேல் பாதுகாப்புதுறைக்கான அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கைதிகள் பறிமாற்றம்:
இதன்படி, இஸ்ரேல் இதுவரை கடத்தி சென்றுவர்களோடு மேலும் பல சிறை கைதிகளை விடுவிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது நேத்தன்யாகு அமைச்சரவை. அதாவது
* ஆயுள் தண்டனை கைதிகள் - 260
* நீண்ட நாள் சிறைவாசிகள் - 400
* இஸ்ரேல் கடத்தி சென்றவர்கள் - 1000 பேர்
இத்தனை பேரும் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் 42 நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள். அடுத்த ஞாயிறு அன்று 3 பணைய கைதிகளுக்கு
மாற்றாக இஸ்ரேல் கடத்தி சென்ற 95 பாலஸ்தீனர்களை விடுதலை செய்வது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications