சாவு பயத்தை காட்டிய இஸ்ரேல்.. ஹெஸ்புல்லா தலைவர் இறுதி சடங்கில் லெபனானில் நுழைந்த போர் விமானங்கள்!
பெய்ரூட்: லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை 5 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொன்றது. 5 மாதங்களுக்கு பிறகு அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று லெபனானில் நடந்தது. இதில் 90 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில் இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் அதிரடியாக நுழைந்து தலைவர்களுக்கு சாவு பயத்தை காட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போருக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு இஸ்ரேல் மீது அண்டை நாடான லெபனானில் செயல்படும் தனது ஆதரவு பெற்ற அமைப்பான ஹெஸ்புல்லாவை வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. வான்வெளி தாக்குதல், பேஜர் அட்டாக் மூலம் ஹெஸ்புல்லா அமைப்பினரை பதறவைத்தது. இந்த தாக்குதலின் ஒருபகுதியாக ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் தீர்த்து கட்டியது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ரகசிய இடத்தில் ஹசன் நஸ்ரல்லா தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த கட்டடத்தை அறிந்த இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஹசன் நஸ்ரல்லா இறந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி நடந்தது. இந்த தாக்குதலால் ஹெஸ்புல்லா அமைப்பு பலமிழந்தது. தலைவர் இன்றி செயல்பட தொடங்கியது. இது இஸ்ரேலுக்கு நிம்மதியை கொடுத்தது.
மேலும் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் கூட பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது இறுதி சடங்கு நிகழ்வு நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் தான் 5 மாதங்களுக்கு பின்னர், லெபனானில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் கேமிலி சாமுன் ஸ்போர்ட் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த இறுதி சடங்கு நடந்தது. இந்த மைதானத்தில் மொத்தம் 55 ஆயிரம் சீட் உள்ளன. அத்தனை சீட்டுகளும் நிரம்பி இருந்தன. இந்த இறுதி சடங்கின்போது ஹசன் நஸ்ரல்லாவின் பேனர்கள், ஹெஸ்புல்லாவின் கொடிகளை மக்கள் கையில் வைத்திருந்தனர்.

இதில் ஏராளமான நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈராக் நாட்டின் பிரதிநிதிகள், ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஏமனின் ஹவுதி அமைப்பி்ன கமாண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் தான் இறுதி சடங்கு நடக்கும்போதே லெபனானுக்குள் இஸ்ரேல் போர் விமானங்கள் நுழைந்தன. இஸ்ரேலின் எஃப் 16 ரக 4எஸ் போர் விமானங்கள் அதிரடியாக பெய்ரூட்டில் நுழைந்து மின்னல் வேகத்தில் பறந்தன. ஹசன் நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு இருந்த மக்கள் இந்த போர் விமானங்களை பார்த்து சிதறி ஓடினர். இதன்மூலம் இஸ்ரேல் முக்கிய மெசேஜை ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு அனுப்பி உள்ளது.
‛‛இஸ்ரேல் நினைத்தால் எந்த நாட்டில் நுழைந்து வேண்டுமானாலும் தாக்கும். இதனால் எங்களிடம் மோதுவதை விட்டுவிட்டு வாலை சுருட்டி கொண்டு அமைதியாக இருங்கள்'' என்ற மெசேஜை பாஸ் செய்துள்ளது. இருப்பினும் இன்றைய தினம் இந்த இஸ்ரேலின் 4 போர் விமானங்களும் குண்டு எதுவும் வீசவில்லை. மாறாக எத்தனை நாட்டு தலைவர்கள் இணைந்தாலும் கூட எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற மெசேஜை அனுப்புவதற்காக மட்டுமே ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் அனுப்பி உள்ளது.
முன்னதாக ஹசன் நஸ்ரல்லா குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தது. அதில், ‛‛இன்று ஹசன் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நடக்கிறது. இன்று உலகம் நல்ல நிலையில் உள்ளது'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications