மிருகமாகவே மாறிப் போன இஸ்ரேல் ராணுவம்.. 13 வயது பாலஸ்தீன சிறுமியை சுட்டுக் கொன்றது!
டெல் அவிவ்: 13 வயதேயான பாலஸ்தீன சிறுமியை, தாக்குதல் நடத்த வந்தார் என்று கூறி இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ள செயல் பலரயைும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேற்குக் கரை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல்மான் குடியேற்றம் என்ற பகுதியில் அந்தச் சிறுமியை இஸ்ரேலிய வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த பகுதியானது ஜெருசலேமுக்கு அருகே உள்ளது.
அந்த சிறுமியின் பெயர் ருக்கய்யா ஈத் அபு ஈத் என்பதாகும். இஸ்ரேல் ரணுவத்தினர் கடந்த நான்கு மாதங்களில் கொடூரமாக கொலை செய்த சிறார்கள் வரிசையில் 29வதாக இந்த சிறுமியின் மரணம் சேர்ந்தஉள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் போலீஸ் செய்தித் தொடர்பாளர் லுபா அல் சம்ரி கூறுகையில், சிறுமி அபு ஈத் தனது பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் கோபத்தில் வீட்டை விட்டுப் போயுள்ளார். மறுபடியும் அவர் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தனது கையில் வைத்திருந்த கத்தியால் பாதுகாவலரை குத்த முயன்றார். இதையடுத்து தற்காப்புக்காக பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சிறுமி உயிரிழந்தார் என்று கூறினார்.
ஆனால் போலீஸாரின் கூற்றை அபுவின் தாயார் மறுத்துள்ளார். தனது மகளிடம் கத்தியே இல்லை என்றும், வேண்டும் என்றே தான் தனது மகளை சுட்டுக் கொன்றுள்ளனர் இஸ்ரேலியர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா முனை ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அட்டகாசமும், அட்டூழியமும் செய்து வருகிறது இஸ்ரேல். இதில் சிக்கி பல அப்பாவி பாலஸ்தீனியர்கள் தினசரி செத்து விழுகின்ன்றனர். இந்த வரிசையில் ருக்கய்யாவின் மரணமும் இணைந்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications