எலான் மஸ்க்கிற்கு சீனா தரும் தொல்லை.. ஸ்டார்லிங்கை லேசர் துப்பாக்கியால் சுட திட்டம்! பகீர் பின்னணி
பெய்ஜிங்: உலகில் இணையதள சேவை வழங்கப்பட முடியாத தொலைதூர பகுதிகளுக்கு எலான் மஸ்க்கின், ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும் இது சீன நாட்டின் தகவல்களை திருட முயன்றால் லேசர் துப்பாக்கி மூலம் அதை சுட்டு வீழ்த்த அந்நாட்டு ராணுவம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா, x சோஷியல் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார். டெஸ்லாவின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருக்கிறது. இன்டெர்நெட் இணைப்பு வழங்க முடியாத இடங்களில் அதை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதுவரை 70 நாடுகளில் ரிமோட் ஏரியாக்கள் எனப்படும், தொலைதூர கிராமப்பகுதிகளில் இணைய சேவையை இது வழங்கி வருகிறது. இதனை உலகம் முழுவதும் விரிவுப்படுத்த ஸ்டார்லிங்க் முயன்று வருகிறது.

சமீபத்தில் கூட இந்தோனேஷியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்கியிருந்தது. இப்படி இருக்கையில், சீனாவில் உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சீனாவின் ரகசியங்களை இந்த செயற்கைக்கோள்கள் திருடும்பட்சத்தில், அல்லது சீனாவை இந்த செயற்கைக்கோள்கள் சட்டவிரோதமாக கண்காணிக்கும் நிலையில் அதை லேசர் துப்பாக்கிகள் மூலம் அழிக்க சீனா அழித்துவிடும் என்று 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' தெரிவித்திருக்கிறது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது "ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சீனாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அச்சுறுத்தலாக இருந்தால் அதை அழிக்க சீனா நீர்மூழ்கி கப்பல்களை தயாரித்து வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, ராணுவ அச்சுறுத்தல்கள் உள்ள பகுதிகளில் இவை நிலைநிறுத்தப்படுகின்றன.
நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை ஏவும்போது அது வெளிப்படையாக தெரிய வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்லாது அதை இடைமறித்து தாக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இதற்கு மாற்றாக லேசர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையில் அதிகம். இதை அழிக்க ஏவுகணைகளையும் அதிக அளவு பயன்படுத்த வேண்டும். ஆனால் லேசர் துப்பாக்கிகள் அப்படியல்ல. ஒரு சில துப்பாக்கிகளை கொண்டு மொத்த இலக்குகளையும் அழித்துவிட முடியும்.
தங்கள் எல்லைக்குகள் செயற்கைக்கோள்கள் வரும் வரை நீர்மூழ்கி கப்பல்கள் காத்திருக்கும். வந்தவுடன் ஒன்றிரண்டு மட்டும் அதை அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். பின்னர் மற்ற கப்பல்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டடு அனைத்து செயற்கைக்கோள்களையும் சுட்டு வீழ்த்திவிடும்" என்று கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 6,219 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன, அவற்றில் 6,146 செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications