Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலை ஒலித்த சைரன்.. எதிர்பார்க்கவில்லை! திக் திக் நொடிகளை விவரித்த இஸ்ரேலில் உள்ள தமிழக மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த நிலையில், இஸ்ரேலில் படித்து வரும் தமிழக மாணவர்கள் அங்கு நிலவும் சூழலை விவரித்துள்ளனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது காசா எனும் பகுதியாகும். தன்னாட்சி பெற்ற பகுதியாக காஸா முனை பகுதி உள்ளது. எனினும் பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது.

அதே நேரத்தில், பாலஸ்தீனத்துக்கு எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு உள்ளது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படைகள் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டும் இன்றி கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்தது. இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அயர்ன் ஸ்வாட்ஸ்' (Operation Iron Swords) என பெயர் வைத்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் பலியானதாகவும் 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இஸ்ரேலில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்படி இஸ்ரேலில் உச்ச கட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், தனியாக இருப்பதை தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியதுள்ளது.

it-is-very-scary-and-intense-indian-students-in-israel-on-hamas-terriost-attack

இதனிடையே, இஸ்ரேலில் படித்து வரும் தமிழக மாணவர்கள் அங்கு நிலவும் சூழலை விவரித்துள்ளனர். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தமிழக மாணவரான கோகுல் மணவாளன் கூறுகையில், "நான் மிகவும் பதற்றமும் அச்சமும் அடைந்தேன். அதிர்ஷ்டவசமாக எங்களுக்க்கு அருகே முகாமும் இஸ்ரேல் போலீஸ் படைகளும் இருந்தன. தற்போது வரை பாதுகாப்பாக இருக்கிறோம். இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். இங்குள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம்" என்றார்.

it-is-very-scary-and-intense-indian-students-in-israel-on-hamas-terriost-attack

அதேபோல், தமிழகத்தை சேர்ந்த ஆதித்ய கருணாநிதி நிவேதிதா என்ற மாணவி கூறுகையில்,
திடீரென இந்த சம்பவம் நடந்தது. இஸ்ரேலில் மத ரீதியிலான நீண்ட விடுமுறை விடப்பட்டுள்ள இந்த சமயத்தில் இதை நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அதிகாலை 5.30 மணியளவில் சைரன் ஒலி கேட்டது. 7-8 மணி நேரம் பங்கர்களில் பதுங்கியிருந்தோம். வீட்டிற்குள்ளே இருக்குமாறு எங்களை கேட்டுக்கொண்டனர். இந்திய தூதரகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அடுத்து என்ன என்பது குறித்து இந்திய தூதரம் எங்களுக்கு தெரிவிக்கும்" என்றார்.

அதேபோல், மற்றொரு மாணவரான, விமல் கிருஷ்ண மூர்த்தி மணிவன்னன் கூறுகையில், "மிகவும் பயமாக உள்ளது. இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்பில் உள்ளது" என்றார். இதேபோல் இஸ்ரேலில் சிக்கி உள்ள 15 தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் உதவிக்காக உதவி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+