அடித்துவிட்ட வங்கதேசம்.. மோடி - முகமது யூனுஸ் சந்திப்பால் வந்த புது பிரச்சனை.. பரபரப்பு தகவல்
பாங்காக்: இந்தியா - வங்கதேசம் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே தாய்லாந்தில் பிரதமர் மோடியை, வங்கதேச இடைக்கால அரசின் முகமது யூனுஸ் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு எதிராக வாய்ச்சவடால் கூடாது என்று பிரதமர் மோடி வார்னிங் செய்த நிலையில் இந்த சந்திப்பு பற்றி வங்கதேசம் தரப்பில் விளக்கம் பரபரப்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் என்பது உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்தார். இப்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வந்தது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது. இருநாடுகள் இடையேயான உறவு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. தேவையின்றி நம் நாட்டை வங்கதேசம் சீண்டி பார்க்கிறது. பாகிஸ்தான், சீனாவுடன் கைகோர்த்து நம் நாட்டின் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தலை வங்கதேசம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த மோதலுக்கு நடுவே தான் பிரதமர் மோடியை முதல் முதலாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு என்பது நேற்று முன்தினம் நடந்தது. பிரதமர் மோடியும், முகமது யூனுசும் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடந்த BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். அந்த மாநாட்டின் ஒருபகுதியாக இருவரும் சந்தித்து பேசினர். அப்போது இருநாடுகளின் உறவு பற்றி விவாதிக்கப்பட்டது.
அதோடு பிரதமர் மோடி, ‛‛வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதியளிக்க வேண்டும். வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயக செயல்பாடு உள்ளிட்டவற்றுக்கு இந்தியா உதவி செய்ய தயாராக இருக்கிறோம்'' என்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு எதிரான வாய்ச்சவடாலை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி நேரடியாக முகமது யூனுஸிடம் கூறியிருந்தார்.இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி - முகமது யூனுஸ் ஆகியோரின் சந்திப்பு பற்றி வங்கதேசம் சார்பில் விளக்கம் அளிக்கப்ட்டுள்ளது.
இதுதொடர்பாக முகமது யூனுஸின் செய்தி பிரிவு செயலாளர் ஷபியுல் ஆலம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது முகமது யூனுஸிடம், பிரதமர் மோடி மரியாதையாக நடந்து கொண்டார். அவரது பணியை பாராட்டினார். ஷேக் ஹசீனாவுடன் இந்தியா நல்லுறவை வைத்திருந்தோபேது ‛உங்களிடம் அவர் அவமரியாதையாக நடந்துகொண்டதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் உங்களை மதிக்கிறோம்' என்று கூறினார்.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது பற்றி முகமது யூனுஸ் பேசினார். அதற்கு பதில் என்பது எதிர்மறையாக இல்லை. ஷேக் ஹசீனா ஒரு நாள் டாக்காவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று உறுதியாக நம்புகிறோம். நூற்றாண்டில் இல்லாத விசாரணையை பார்ப்போம். வங்கதேசத்துடனான தனது உறவுகளில் இந்தியா ஒரு புதிய போக்கை வகுக்க விரும்புகிறது. என்பது இந்திய சந்திப்பில் தெரியவந்தது.
இந்தியாவின் உறவு என்பது தனிப்பட்ட கட்சி அல்லது தனிப்பட்ட நபர்களுடன் இல்லை. வங்கதேச மக்களுடன் தான் இந்தியாவின் உறவு உள்ளது பிரதமர், முகமது யூனுஸிடம் கூறினார். முகமது யூனுஸ் ஏற்கனவே பலமுறை கூறியது போல் இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம். இது பரஸ்பர மரியாதை, நியாயம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்'' என்றார்.
வங்கதேசத்தின் முகமது யூனுஸின் செய்தி செயலாளர் இப்படி கூறினாலும் கூட ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது பற்றி இருதலைவர்களும் பேசியதற்கான அடிப்படை ஆதாரம் என்பது இல்லை. இது வங்கதேசம் மீதான நல்ல நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்புகிறது. இதுபற்றி நம் நாட்டின் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று தொடர்ந்து வங்கதேசம் கூறி வருகிறது. பிரதமர் மோடிக்கு, முகமது யூனுஸின் இடைக்கால அரசு தரப்பில் கடிதமும் எழுதப்பட்டது. ஆனால் நம் நாடு பதிலளிக்கவில்லை. இதன்மூலம் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.
இப்படியான சூழலில் தான், ‛‛பிரதமர் மோடி, முகமது யூனுஸிடம் மரியாதையாக நடந்து கொண்டார். ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது பற்றி பேசியபோது எதிர்மறையாக பதிலளிக்கவில்லை'' என்று வங்கதேசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷேக் ஹசீனா விவகாரம், ஷேக் ஹசீனா அரசுக்கும், முகமது யூனுஸ் அரசுக்கும் இடையேயான விவகாரம் பற்றி பிரதமர் மோடி கருத்து தெரிவித்ததாக கூறிய தகவலில் உண்மை இல்லை என்கின்றனர் விபரம் அறிந்தவர். தவறான உள்நோக்கத்துடன் வங்கதேசம் இந்த தகவலை பரப்புகிறது. இது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் விரைவில் அதுபற்றி நம் நாட்டின் தரப்பில் விளக்கம் என்பது அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications