கொரோனாவிலிருந்து நலம் பெறுக! ஸ்டாலினுக்காக மக்காவில் சிறப்பு துஆ செய்த முஸ்லீம் லீக் நிர்வாகி!
ரியாத்: சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு ஹஜ் புனித யாத்திரை சென்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மகளிரணி தலைவர் முசாபர் பாத்திமா, முதல்வர் ஸ்டாலினுக்காக அங்கு சிறப்பு து ஆ செய்திருக்கிறார்.
கொரோனா பாதிப்பிலிருந்து ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டி தனது புனித பயணத்தின் போது இந்த பிரார்த்தனையை செய்திருக்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் சமதுவின் மகள் தான் பாத்திமா முசாபர் என்பது கவனிக்கத்தக்கது.

சென்னை கவுன்சிலர்
சென்னை மாநகராட்சி எழும்பூர் பகுதி கவுன்சிலராக இருப்பவர் முசாபர் பாத்திமா. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிரணி தலைவராகவும் இவர் இருக்கிறார். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மக்காவுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலறிந்து அங்கு சிறப்பு து ஆ செய்து ஸ்டாலின் நலம் பெற வேண்டியிருக்கிறார்.

குடும்ப நண்பர்
முசாபர் பாத்திமாவின் தந்தை அப்துல் சமது கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர். அவரது காலம் தொட்டு ஸ்டாலின் குடும்பத்தினருடனும் முசாபர் பாத்திமா நட்பு பேணி வருகிறார். ஹஜ் பயணத்தின் போது ஹாஜிகள் கேட்கும் து ஆ (பிரார்த்தனை) இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாக உள்ளது.

உலகம் முழுவதும்
இதேபோல் உலகின் பல நாடுகளில் இருந்தும் முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டாலும் கூட, தொலைபேசி வழியாக ஆட்சி நிர்வாக பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்து தான் வருகிறார்.
Recommended Video

ஆக்டிவாக இருக்கிறார்
அதேபோல் தனது பெயரிலான அறிக்கைகளையும் அவர் வெளியிட்டுத் தான் வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு லேசானது தான் என்பதால் இன்னும் ஒரு வாரத்தில் அவர் மீண்டும் தனது பணிகளை கவனிக்கத் தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications