தெ.ஆப். தேர்தல் வெற்றியை மண்டேலாவுக்கு சமர்ப்பிக்கிறோம்... அதிபர் ஜூமா அறிவிப்பு
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியை மறைந்த நெல்சம் மண்டேலாவுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமா.
தென்ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடி தன் வாழ்நாளில் அதிகநாட்களை சிறையில் கழித்தவர் நெல்சன் மண்டேலா. வயது மூப்பின் காரணமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நெல்சன் மண்டேலா சமீபத்தில் காலமானார்.

இந்நிலையில், கடந்த 7-ந்தேதி தென்னாப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வென்று மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 400 இடங்களில் ஆளுங்கட்சி 249 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. 89 இடங்களில் வென்ற ஜனநாயகக்கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமருகிறது.
தங்களது தேர்தல் வெற்றி குறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில், ‘இந்த வெற்றியை மடிபா (நெல்சன்மண்டேலா) நினைவுக்கு நாங்கள் அர்ப்பணிக்கிறோம். அவரது பாதையில் எங்களது பயணம் தொடரும். இதே நாளில் தான் (10&ந்தேதி) நெல்சன்மண்டேலா நாட்டின் முதலாவது கறுப்பின அதிபராக பதவி ஏற்றார்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தல் வெற்றி, நாட்டின் பொருளாதார ஏற்றத்துக்கும், சமூகமேம்பாட்டுக்கும் ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு நிர்மாணிப்பு திட்டத்தினை தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வதற்கு, மக்கள் வழங்கிய உரிமம் என எடுத்துக்கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications