60 நாட்களுக்குள் ஜாதவ் மேல்முறையீடு செய்யலாம்! - பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ், 60 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் பாதுகாப்பு துறை தொடர்ந்த வழக்கில் அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை ராணுவ தளபதியும் உறுதி செய்துவிட்டார்.

இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ள இந்தியா, இது திட்டமிட்ட கொலை என்று கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் சபையில் அந்த நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பேசுகையில், "குல்பூஷண் ஜாதவ் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய லாம். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது.
இந்த பிரச்சினையில் இந்தியா சொல்வதுபோல் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை. இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலையும் ஆகாது. காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பதுதான் திட்டமிட்ட கொலை. குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கு விசாரணை 3 மாதங்கள் நடைபெற்றன. எனவே அவர் அவசர அவசரமாக தண்டிக்கப்பட வில்லை,'' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications