14 வயது சிறுவனுடன் கூடாநட்பு: 31 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஐந்தாண்டு சிறை
லண்டன்: பதினான்கு வயது சிறுவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்த 31 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைர் பகுதியை ஒட்டியுள்ள ஹேர்வுட் ரைஸ் பகுதியை சேர்ந்தவர், கெர்ரி ஹார்ஸ்ஃபால் (31). இங்குள்ள முதியோர் காப்பகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த அந்தப் பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும், 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையே, தனக்கு சாதகமாக்கிய அப்பெண், 2013ம் ஆண்டுமுதல் தனிமை கிடைக்கும் போதெல்லாம் சிறுவனுடன் உல்லாசமாக இருந்து பொழுதை கழித்துள்ளார். இதனிடையே சிறுவனின் போக்கு, அவனின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஒருநாள், அந்த சிறுவன் வீட்டில் இல்லாத வேளையில் அவனது லேப்டாப்பை ஆய்வுசெய்த அவர்கள் வாயடைத்துபோயினர். ஏனெனில், இருவருக்கும் நடுவே, ஆபாசமான வகையில், சுமார் 1700 மெசேஜ்கள் அதில் பதிவாகியிருந்தன.
உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்ட அவர்கள் ஒன்றும் அறியாத சிறுவனை அந்தப் பெண் சீரழித்துவிட்டதாக புகார் அளித்தனர். அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், மூன்று குற்றப்பிரிவுகளின்கீழ் அவள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளியை ஐந்தாண்டு சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தற்போது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கர்ப்பிணியாக இருக்கும் ஹார்ஸ்ஃபாலை போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications