ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மெல்போர்னையே திரும்பி பார்க்க வைத்த ஆஸி. தமிழர்கள்
சிட்னி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் இன்று மாபெரும் அமைதி கூடல் நடத்தியுள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இது குறித்த வழக்கிலும் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் தமிழர்கள் வியாழக்கிழமை அமைதி கூடல் நடத்தினர்.
மேலும் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் விக்டோரியா ஹவுஸ் முன்பு இன்ற மாலை 6 மணிக்கு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி கூடல் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு இந்த அளவில் தமிழர்கள் கூடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இதே போன்று சிட்னி நகரில் வசிக்கும் தமிழர்கள் ஓபரா ஹவுஸ் முன்பு திரண்டு அமைதி கூடல் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் போராடும் சக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த போராட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications