For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் இருந்து வெளியேறி...இந்தியாவில் தொழில் துவங்க... ஜப்பான் மானியம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டோக்கியோ: சீனாவில் இருந்து தங்களது தொழில் நிறுவனங்களை இந்தியா அல்லது வங்கதேசத்துக்கு நகர்த்தினால் ரூ. 1615 கோடி மானியம் வழங்கப்படும் என்று ஜப்பான் நாடு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின்னர் சீனாவுடன் ஏற்பட்டு இருக்கும் வர்த்தக உரசலுக்கு பின்னணியில் இந்த அறிவிப்பை ஜப்பான் அறிவித்துள்ளது.

நடப்பு 2020ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை ஜப்பான் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 1615 கோடி மானியம் வழங்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

Japan allocated Rs 1,615 crore subsidy to encourage companies to shift to India from China

அனைத்து பொருட்களுக்கும் ஒரே நாட்டை நம்பி இருப்பதை தவிர்த்து, தொழில் பரவல் திட்டத்தின் கீழ் மற்ற நாடுகளுக்கும் விஸ்தரிக்க ஜப்பான் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. பொதுவாக எலக்ட்ரானிக், மருத்துவ உபகரணங்களுக்கு சீனாவையே சார்ந்து இருக்கும் சூழல் ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா கால கட்டத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பெரும்பாலான நாடுகள் சீனாவையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்தது.

கடந்த வியாழக் கிழமை இரண்டாவது சுற்று விண்ணப்பங்கள் ஜப்பானில் துவங்கப்பட்டது. இதில், ஜப்பான், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பின்னடைவு குறித்து பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, சீனாவில் இருந்து ஜப்பான் நிறுவனங்களை இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு மாற்றுவதற்கு ஜப்பான் அரசு முன் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

திபெத்தில் 146 பில்லியன் டாலர் கொட்டும் சீனா...நேபாளத்துக்கு ரயில் பாதை!! திபெத்தில் 146 பில்லியன் டாலர் கொட்டும் சீனா...நேபாளத்துக்கு ரயில் பாதை!!

Recommended Video

    Japan- ல் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 1500 எலும்புக்கூடுகள்

    ஜப்பானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா இருந்து வருகிறது. ஆனால், பொது முடக்கம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சீனாவில் இருந்து இறக்குமதி பாதியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக விரிவாக்கம் குறித்து இந்திய, ஜப்பான் நாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் விரிவாக பேசப்படும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Japan allocated Rs 1,615 crore subsidy to encourage companies to shift to India from China
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X