For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.. ஜப்பானுக்கும் பரவிய கொரோனா.. சீனா செல்லாமலே வைரஸ் தாக்கப்பட்ட இளைஞர்!

யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது ஜப்பானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் சீனா| How China will build a hospital in 6 days ?

    டோக்கியோ: யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது ஜப்பானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் இதற்கு முன் சீனா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 102 பேர் பலியாகி உள்ளனர். 2100 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குமோ என அச்சம்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 430 பேர்.. முக்கிய தகவல்கள் கொரோனா வைரஸ் தாக்குமோ என அச்சம்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 430 பேர்.. முக்கிய தகவல்கள்

    கொரோனா வைரஸ் எப்படி

    கொரோனா வைரஸ் எப்படி

    இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே 3 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுவிட்டது. பிரான்ஸ், பிரிட்டீஷ், கனடா ஆகிய நாடுகளில் தலா 2 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஹாங்காங்கிலும் இரண்டு பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து அருகில் இருக்கும் நாடுகளுக்கு யார் சென்றாலும் அங்கும் இந்த நோய் தாக்குதல் பரவி வருவது நடந்து வருகிறது.

    நோய் தாக்குதல்

    நோய் தாக்குதல்

    அதன் ஒரு கட்டமாக தற்போது இந்தியாவிலும் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் பெங்களூரில் இரண்டு பேர், மும்பையில் இரண்டு பேர், பீகாரில் ஒருவர், டெல்லியில் 4 பேருக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதேபோல் கேரளாவில் 7 பேருக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பரவி வருகிறது

    பரவி வருகிறது

    பொதுவாக இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்குத்தான் பரவி வருகிறது. அதாவது சீனாவிற்கு செல்லாத யாருக்கும் இந்த நோய் பரவவில்லை. சீனாவில் அதிலும் கூட வுஹன் நகரத்திற்கு சென்று திரும்பியவர்களுக்குத்தான் இந்த வைரஸ் பரவி வந்தது. இதனால் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் மக்கள் எல்லோரும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். சீனாவில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

    ஜப்பான்

    ஜப்பான்

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது ஜப்பானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் இதற்கு முன் சீனா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இவர் இதற்கு முன் சீனா செல்லவில்லை, சீனர்கள் யாருடனும் சமீபத்தில் பழகவில்லை. ஆனால் ஆச்சர்யமாக இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மருத்துவர்களை, ஆராய்ச்சியாளர்களை இந்த நோய் தாக்குதல் பெரிய அச்சத்திற்கும், குழப்பத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

    நம்பிக்கை உடைந்தது

    நம்பிக்கை உடைந்தது

    உடல் ரீதியான தொடர்பு, சீனர்களுடன் தொடர்பு இருந்தால் மட்டுமே இந்த கொரோனா வைரஸ் தாக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஜப்பான் சம்பவம் பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. சீனா செல்லாத ஒருவருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்து வருகிறார்கள். இந்த வைரஸ் வேறு எப்படியாவது அவருக்கு பரவி இருக்கும் என்கிறார்கள். வானில் பறந்து வரும் பறவைகள், கடல் மீன்கள் மூலம் கூட கொரோனா வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Japan confirms Coronavirus in a man who had not been to China ever before.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X