நம்பி வந்த மாணவி! ரேப் செய்து கொன்று தின்ற நபர்.. பிரபலமாக மாறிய கொடூரம்! ஆனாலும் விதி விடவில்லை

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் இளம் பெண்ணை கொடூரமாக ரேப் செய்து கொன்ற போதிலும் தண்டனை பெறவில்லை. ஆனால், அவருக்கு இப்போது இயற்கை தண்டனை கொடுத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் சாரதா என்ற இளம் பெண்ணை அப்தாப் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. கொலைக்குப் பின், காதலியின் உடலை அவன் 35 பீஸாக வெட்டியது தான் கொடூரத்தின் உச்சம்.

இதேபோல உலகையே அலறவிட்ட ஒரு கொடூர கொலை சம்பவம் பிரான்ஸில் நடந்தது. ஆனாலும், அந்த கொலைகாரன் ஒரு நாள் கூட சிறையில் தண்டனை அனுபவிக்கவில்லை என்பது தான் வினோதம்.

 ஜப்பான் இளைஞர்

ஜப்பான் இளைஞர்

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இஸ்ஸே சாகாவா.. இவர் கடந்த 1980களில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது உடன் படிக்கும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாணவி ரெனி ஹார்ட்வெல்ட் என்பவரைத் தனது கல்லூரியில் பார்த்துள்ளார். கொஞ்ச நாட்கள் பழகிய பின்னர் ரெனியை தனது வீட்டிற்கு லன்சுக்கு வரும்படி இஸ்ஸோ அழைத்துள்ளார். இஸ்ஸோ அதுவரை மிகவும் அமைதியாகவே இருந்துள்ளார். இதனால்ஹார்ட்வெல்ட்டுக்கு எந்தவொரு சந்தேகமும் ஏற்படவில்லை. உடன் படிக்கும் மாணவர் என நம்பி இஸ்ஸோ வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 கொடூரம்

கொடூரம்

லன்சுக்கு வீட்டிற்கு வந்த ரெனி ஹார்ட்வெல்ட்டை துப்பாக்கியால் கழுத்தில் சுட்ட இஸ்ஸோ, அவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், ரெனி ஹார்ட்வெல்ட் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அதை அடுத்துப் பல நாட்கள் சமைத்தும் சாப்பிட்டுள்ளான் இந்த கொடூரன். பின் ரெனியின் உடல் பாகங்களில் மீதியை அவன் அங்குள்ள பூங்கா ஒன்றில் வீச முயன்றுள்ளான். போலீசார் ரெனியை தேட தொடங்கிய நிலையில், சில நாட்களில் இஸ்ஸோவை கைது செய்தனர். அவனும் போலீசாரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

 நாடு கடத்தல்

நாடு கடத்தல்

போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இருப்பினும், விசாரணையில் இஸ்ஸோவுக்கு மனநல பாதிப்புகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து சட்ட விசாரணைக்கு அவர் தகுதியற்றவர் என்று பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் 1983ஆம் ஆண்டு தெரிவித்தனர். சில மாதங்கள் பிரான்ஸிலுள்ள மனநல காப்பகத்தில் வைக்கப்பட்ட இஸ்ஸோ, பின் 1984இல் ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டார். இதைக் கேட்டு மனமுடைந்த போன ஹார்ட்வெல்ட்டின் குடும்பம், குறைந்தது ஜப்பானில் இஸ்ஸோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

 ஒரு நாள் கூட சிறையில் இல்லை

ஒரு நாள் கூட சிறையில் இல்லை

ஜப்பானில் வழக்கு தொடரவும் அவர்கள் தீவிர முயற்சி எடுத்தனர். தங்கள் பெண்ணை கொடூரமாகக் கொன்ற கொலைகாரனை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என்பதால் தீவிர முயற்சி எடுத்தனர். நாடு கடத்தப்பட்ட பின், இஸ்ஸோவை ஜப்பான் போலீசார் மருத்துவர்களுடன் இணைந்து பரிசோதனை செய்தனர். அதில் அவருக்குச் சிறு மனநல பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் இதற்காக மருத்துவச் சிகிச்சை எல்லாம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டனர்.

 வருத்தம் கூட இல்லை

வருத்தம் கூட இல்லை

இதனால் இஸ்ஸோ மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இருப்பினும், பிரன்ஞ் அதிகாரிகள் வழக்கு தொடர்பான கோப்புகளை ஜப்பான் அதிகாரிகளுக்கு அனுப்பவே இல்லை. அந்த கொலை வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டதால் கேஸ் ஃபைல்களை அனுப்ப முடியாது என்று பிரன்ஞ் அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் கொடூரமாகக் கொலைக்குப் பின்னரும், இஸ்ஸோ ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. அதேபோலத் தான் கொலை செய்யவில்லை என்பதையும் அவன் மறுக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் கிடைத்த ஊடக வெளிச்சத்தை என்ஜாய் செய்த இஸ்ஸோ, கொலை தொடர்பாக ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

 ஜப்பானில் சொகுசு வாழ்க்கை

ஜப்பானில் சொகுசு வாழ்க்கை

கடைசிக் காலம் வரையும் கூட இஸ்ஸோ, தான் செய்த கொடூரத்தை நினைத்து வருந்தியது இல்லை. கொடூர கொலை செய்த போதிலும், ஜப்பானில் இவர் ஒரு பிரபலம் போலவே வலம் வந்தார். தொடர்ச்சியாகப் பல ஜப்பான் ஊடகங்களுக்குப் பேட்டியும் கொடுத்தார். அங்கு காமிக் புத்தகங்களை வெளியிட்ட இஸ்ஸோ, ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். மனித உடல் பாகங்களை உண்பதில் தனக்கு ஆர்வமாக உள்ளதாகவே அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பேட்டி அளித்திருந்தார்.

 விதி விடவில்லை

விதி விடவில்லை

இப்படி உலகத்தையே அதிர வைத்த இந்த கொடூர கொலைகாரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு ஏற்பட்டது. இதனால் வீல் சாரிலேயே முடங்கிய அவர், தனது சகோதரனின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். இறுதிக் காலத்தில் இவருக்கு நிமோனியா பாதிப்பும் கூட ஏற்பட, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் கடந்த நவ.24ஆம் தேதி அவர் உயிரிழந்தார். கொடூர கொலையை நினைத்து துளியும் வருந்தாத இஸ்ஸோவுக்கு இறுதியில் தக்க தண்டனை கிடைத்துள்ளது...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+