துபாயில் பெரிய்ய்ய கேக் வெட்டி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்: நாஞ்சில் சம்பத் பங்கேற்பு
துபாய்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கடந்த மாதம் 7ம் தேதி துபாயில் உள்ள ஜெ.ஜெ. பள்ளி அரங்கில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சல் சம்பத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகளை பட்டியலிட்டு சிறப்பித்துப் பேசினார்.
துபாயில் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டதை மிகவும் பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் மோகன், பஹ்ரைன் தமிழ்ச் சங்கம் சாமி, லண்டன் ஜான், ராமச்சந்திரன், துபாய் முத்தமிழ்ச் சங்கம் ஷா, அனீஸ், சிகாமணி, கணேஷ், பாலா, பாலு, திருமதி. விஜி பாலு, சாகுல் ஹமீத், பாலுசாமி, ராஜேந்திரன், புருஷோத்தமன் மற்றும் 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கிறிஸ்டல் குழுவினரின் நடன நிகழ்ச்சி விழாவிற்கு வந்த மக்களின் கண்களை கவரும் வண்ணமாக அமைந்திருந்தது.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை திரு. சக்திவேல், கார்த்திகேயன், சரவணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார் செல்வி. நிவேதிதா.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications