காசா மீது தொடரும் தாக்குதல்.. போர் நிறுத்தம்.. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச போராட்டங்கள் போர் நிறுத்தம் தொடர்பான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
கடந்த 7ம் தேதியன்று அதிகாலையில் மத்திய கிழக்கில் திடீரென குண்டு சத்தங்கள் கேட்க தொடங்கின. இதற்கு காரணம் ஹமாஸ் படைகள்தான். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று கூறி ஹமாஸ், காசாவிலிருந்து சுமார் 5000 ராக்கெட்களை ஒரேநேரத்தில் வீசியது. கடந்த காலங்களில் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்ததால், இப்படியான தாக்குதல் நடக்கும் என ஏற்கெனவே இஸ்ரேல் கணித்திருந்தது.

எனவே இதை தடுக்க அயன் டோம் எனும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருந்தது. இது இஸ்ரேல் மீது பாயும் ராக்கெட்டுகளை வானத்திலிலேயே வழி மறித்து தாக்கி அழித்துவிடும். இருப்பினும் ஒரே நேரத்தில் அதிக அளவில் ராக்கெட்கள் பாய்ந்ததால் அயன் டோம் பாதுகாப்பையும் மீறி இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேல், காசா மீது கடுமையான தாக்குதலை தொடுத்தது.
இந்த தாக்குதல் 32வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டித்திருக்கின்றன. தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. ஐநா சபையிலும் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்படி இருக்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகளில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 5ம் தேதி இஸ்ரேலுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர். இப்படியான போராட்டங்கள் போர் நிறுத்தம் குறித்த நெருக்கடியை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கனை சமீபத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இஸ்ரேல் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பிடி கொடுக்காமல் பேசி வருவதால், காசாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை தற்காலி போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என பைடன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல ஹமாஸ் வசம் இருக்கும் பிணை கைதிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விரைவில் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications