என்ன நடக்கும் என நான் சொல்ல மாட்டேன்.. ஆனால்.. போருக்கு நடுவே இஸ்ரேல் பிரதமர் சொன்ன வார்த்தை
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகள் தாக்கி வரும் நிலையில், எதிரிகள் தற்போதுதான் தங்கள் செயலுக்கான விலையை கொடுக்க தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர்8-வது நாளாக நீடித்து வருகிறது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ஒரு நொடி அதிர்ந்து போன இஸ்ரேல், பின்னர் பதில் நடவடிக்கையாக காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.
தற்போது காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படை தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளது. இதற்காக காசா வின் வடக்கு பகுதியில் வசிக்கும் 10 லட்சம் மக்களை தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 24 மணி நேர கெடுவையும் விதித்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐநா, இஸ்ரேல் தனது அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து காசா மக்கள் பலரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர். பலர் அண்டை நாடான எகிப்தை நோக்கி அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். காசா நகரம் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை இடையேயான போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பாக கூறும் போது, தற்போதுதான் தாக்குதல் தொடங்கியிருப்பதாகவும் எதிரிகள் விலையை கொடுக்க தொடங்கியிருப்பவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பெஞ்சமின் நெதன் யாகு கூறுகையில், " நமது எதிரிகள் தற்போது விலையை கொடுக்க தொடங்கியிருக்கிறார். என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், ஒன்றைமட்டும் சொல்கிறேன். இது வெறும் தொடக்கம் தான்" என்றார்.
தொடர்ந்து நெதன்யாகு கூறுகையில், "நாம் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூதர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரங்களை உலகம் மறக்க ஒருபோதும் விட மாட்டோம். வரைமுறைகள் இன்றி அதிகாரத்தை பயன்படுத்தி எதிரிகளுடன் சண்டையிடுவோம்" என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications