Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுவிட்சர்லாந்தில் சூரசம்ஹாரம்.... கந்தசஷ்டி விழாவில் கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரமான பெர்னில் அமைந்துள்ளது ஞானலிங்கேஸ்வரர் கோயில். தமிழர்கள் பெருவாரியாக வந்து வழிபடும் இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சூரன் போரையும், திருக்கல்யாணத்தையும் ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

7 நாட்கள் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் கொடியேற்றம் 12. 11. 2015 வியாழக்கிழமை, நடைபெற்றது.

16. 11. 2015 திங்கட்கிழமை திருமுருகுத்தேர்த்திருவிழா நடைபெற்றது. 17. 11. 2015 செவ்வாய்க்கிழமை - சூரன்போர் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 18. 11. 2015 புதன்கிழமை காலை 07.00 மணிமுதல் - திருக்கல்யாணம் மாலை 17.00 மணிமுதல் நடைபெற்றது.

கந்த சஷ்டி திருவிழா

கந்த சஷ்டி திருவிழா

முழுமுதற் கடவுள் ஞானலிங்கப்பெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஞானாம்பிகை சக்தியோடு தோன்றியவர் தமிழே முருகப்பெருமான் ஆவார். சூரனுடன் போரிட்ட பெருமானை போற்றும் நாள் கந்தசஷ்டியாகும்.

சஷ்டி நோன்பின் பெருமை

சஷ்டி நோன்பின் பெருமை

முருகப்பெருமானிற்கு பல்வேறு விழாக்கள் - வழிபாடுகள் இருப்பினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக இந்த சஷ்டி நோன்பு விளங்குகின்றது. 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' எனும் வழக்குமொழியின் பொருள்: சஷ்டியில் நோன்பு இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும் என்பதாகும். இந்நோன்பு காலத்தில் பெருமானை மனதார வேண்டினால், தடையின்றிக் குழந்தைப் பேறினை ஞானலிங்கபாலன் முன்வந்து அருள்வான் என்பது ஆன்றோர் வாக்கு.

ஞானலிங்கேஸ்வர பெருமான்

ஞானலிங்கேஸ்வர பெருமான்

இப்பெரும் நோன்பு, தமிழுக்கு கழகம் கண்டபெருமான் அருளாட்சியில், தெய்வத் தமிழ் வழிபாடு சிறந்தோங்கும் செந்தமிழ்த் திருக்கோவிலாம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் 12. 11. 2015 வியாழக்கிழமை, 16.00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நோன்புக்காலத்தில் நாளும் வழிபாடுகளின் நிறைவில் அடியார்களுக்கு பால், பழம், அருளமுதுடன் பானாக்கம் வழங்கப்பட்டது.

சக்திவேல் வழங்கும் விழா

சக்திவேல் வழங்கும் விழா

16.11.2015 திங்கட்கிழமை 16.00 மணிமுதல் ஞானசக்திவேல் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து 19.00 மணிக்கு ஞானலிங்கேச்சுரத்து ஞானவடிவேலன் ஞானமுருகுத் திருத்தேர் ஏறி ஞானத்திருவீதி திருவுலா வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

17.11.2015 16.00 மணிமுதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சூரன்போர் திருக்கோவில் முன்பு உள்ள ஐரோப்பாத்திடலில் நடைபெற்றது.சூரன்போர்கண்டு இளந்தமிழ்ச் செல்வங்களும், பெரியோர்களும் தாம் தாய் நாட்டில் நிறப்தாக உணர்ந்தனர். ஐரோப்பாத்திடல் ஞானலிங்கேச்சுரர் திடலாக விரிந்து, தமிழ் மக்கள் நிறைந்து காணப்பட்டனர்.

சுவிஸ் ஊடகங்களில் சூரசம்ஹாரம்

சுவிஸ் ஊடகங்களில் சூரசம்ஹாரம்

சுவிஸ் நாட்டவர்களும் ஒத்திசைவுடன் வழிபாடுகளில் கலந்து சிறப்பித்தது, பல்லின - மத ஒருமைப்பாடு தேவையாகக் கருதப்படும் இக்காலத்தில், சுவிஸ் ஊடகங்களாலும், பொது மக்களாலும் ஞானலிங்கேச்சுரர் திருவிழா பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. பல்சமய இல்லத்தில் உறுப்பினராகவும் - பங்காளராகவும் விளங்கும் சைவநெறிக்கூடம் ஐரோப்பாத்திடலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒழுங்கினை பேர்ன் அரச நிர்வாகம் பாராட்டியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

18.11.2015 புதன்கிழமை காலை 06.00 மணிமுதல் சிறப்புவழிபாடுகள் நடைபெற்று கந்தப்பெருமான் அடியார்களுக்கு சிவான்ன திருமுருகு அருளமுது வழங்கி கந்தசட்டி நோன்பு பாறணையுடன் நிறைவடைந்தது. அன்றுமாலை 17.00 மணிமுதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று தெய்வானைத் தாயாருக்கும், வள்ளிக்குஞ்சரிக்கும் ஞானவடிவேல்பெருமானுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+