காஷ்மீர் பிரச்சினைக்கு வெளிப்படையான அமைதிப்பேச்சு மூலமே தீர்வு: பாக். பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் கழுத்து எலும்பு. காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 4-வது யுத்தத்திற்கு வழிவகுக்கும் ' என பேசியதாக செய்திகள் வெளியாகின.
பின்னர், தாங்கள் அவ்வாறு கூறவில்லை என உடனடியாக மறுப்புத் தகவலும் பாகிஸ்தான் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் முரண்பட்ட பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ‘எனது வாழ்நாளில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றிபெறும் என்ற பேச்சிற்கே இடமில்லை' எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைக்கு முற்ருப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஐஜாஸ் சவுத்ரி கூறியிருப்பதாவது :-
சியாச்சின் பனிமலைகளில் இருந்து முற்றிலும் ராணுவம் வெளியேறவேண்டும். அங்கு ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இருக்கக்கூடாது. காஷ்மீர் பிரச்சினை அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்காக நாங்கள் இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
காஷ்மீர் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றுகூட நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் தார்மீக மற்றும் ராஜ்ய ஆதரவு அளித்து வருகிறோம். நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாடுகளும் வெளிப்படையாக பேச வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications