கென்யாவில் ஷாப்பிங் மாலில் 3வது நாளாக தொடரும் துப்பாக்கிச்சூடு: 68 பேர் பலி
நைரோபி: கென்யாவில் உள்ள ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 68 பேர் பலியாகினர்.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் அங்கிருந்த முஸ்லீம்களை வெளியேறும்படி கூறிவிட்டது முஸ்லீம் அல்லாதவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 இந்தியர்கள், 2 பிரான்ஸ் நாட்டவர்கள், 2 கனடா நாட்டவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 பேர், 1 சீனர் மற்றும் கானாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 68 பேர் பலியாகினர்.

இறந்தவர்களில் பார்மா கம்பெனியில் பணிபுரிந்த இந்தியரான ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகியோரும் அடக்கம். மேலும் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்பட 4 இந்தியர்கள் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் சிலரை பிணையக் கைதிகளாக மாலுக்குள் பிடித்து வைத்துள்ளனர். முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தொடர்ந்து மாலுக்குள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிதாக துப்பாக்கிச்சூடு நடத்திய சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக மாலுக்குள் தீவிரவாதிகள் இருந்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் 175 பேர் காயம் அடைந்துள்ளனர். பிணையக் கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக கென்ய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கென்ய பாதுகாப்பு படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இது தவிர நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சோமாலியாவில் ஆப்பிரிக்க படைகள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடி வருகிறது. இதற்கு பழிவாங்கும் வகையில் தான் ஷாப்பிங் மாலை தாக்கியதாக அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த மாலுக்கு பணக்கார கென்ய மக்களும், வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications