ஒரே போடு போட்ட கிம்.. அப்படியே உறைந்து நின்ற தோட்டக்காரன்.. ரொம்ப ஓவராத்தான் போறாரு.. கதறும் மக்கள்
வடகொரியா அதிபர் கிம், தோட்ட தொழிலாளர்களை சிறை வைத்தார்
பியாங்யங்: கிம் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. பூக்கள் பூக்கவில்லையாம்.. அதுக்காக அவர் செய்த செயலை பார்த்து வடகொரிய மக்கள் அதிர்ந்து போய் உட்கார்ந்துள்ளனர்.
Recommended Video
உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. அதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்..
அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாராலுமே கண்டுபிடிக்க முடியாது..!

சர்ச்சை
பிறகே அவரே மக்கள் முன்பு திடீரென கேஷூவலாக தோன்றுவார்.. மறுபடியும் அவரே காணாமல் போவார். அதேபோல திடீரென உடம்பு வெயிட் போட்டு காணப்படுவார்.. பிறகு கொஞ்ச நாளில் மெலிந்து வருவார்.. தன்னுடைய நாட்டில் பொருளாதாரத் தடை, வறுமை, பஞ்சம், பசி, நோய்தொற்று, பட்டினி, எது நடந்தாலும் கவலைப்பட மாட்டார்.. ஆனால் இவர் மட்டும் எந்நேரமும் மாட்டுக்கறி சாப்பிட்டு கொண்டே இருப்பார்..

உத்தரவுகள்
நாட்டில் அதிக அளவு வறுமை உள்ளது என்று மக்கள் கண்ணீர் வடித்தால், "எல்லாரும் 2025ம் ஆண்டு வரை குறைவாக சாப்பிடுங்க.. ஒருநாளைக்கு ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்க" என்று அட்வைஸ் தருவார். இதைவிட கொடுமை, தன் நாட்டு மக்களை அவர் நடத்தும் விதம்தான்.. இவருடைய தாத்தா 2 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. அந்த துக்க நாட்கள் நீங்கும்வரை, நாட்டு மக்கள் யாரையுமே சிரிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டார்.. இத்தனைக்கும் அந்த தாத்தாவுக்கு 101 வயசு..

பிறந்த நாள்
இந்நிலையில், இன்னொரு செய்தி கிம் பற்றி வெளிவந்துள்ளது.. இவருடைய அப்பாவுக்கு இன்று பிறந்த நாள்.. அவர் பெயர் கிம் ஜாங் இல்.. இந்த பிறந்தநாளை வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது கிம்மின் வழக்கம். நாட்டின் முன்னோடி தலைவர் என்பதால் பொதுமக்கள் எல்லாரும் மரியாதை செலுத்த வர வேண்டும் என்பது விதி... இன்றைய சிறப்பு நாளுக்காகவே, தன்னுடைய அப்பாவின் பெயரில் ஒரு மலரை உருவாக்கினார் கிம்.. அந்த பூவின் பெயர் கிம்ஜாங்கிலியா..

காரணம் என்ன?
2011ம் ஆண்டு கிம் ஜங் இல் இறந்ததிலிருந்து இந்த பூ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெகோனியா தாவர வகையை சேர்ந்ததாம்.. இந்த பூவை கொண்டு, நிகழ்ச்சி நடத்தும் இடத்தை அலங்கரிக்க வேண்டும் என்று கிம் சொல்லி இருந்தாராம்.. ஆனால், இந்த வருடம் இயற்கை மாறுபாடு காரணங்களால், அந்த பூக்கள் சரியான நேரத்துக்கு பூக்கவில்லை..

தோட்டக்காரர்
பூக்கள் பூக்காததால், கிம்முக்கு கோபம் வந்துவிட்டது.. அந்த கோபத்தை இந்த பூக்களை வளர்க்கும் தோட்டக்காரர்களிடம் காட்டிவிட்டார் கிம்.. தோட்டப் பணியாளர்களை 6 மாதத்திற்கு வதை முகாமிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்... அந்த தோட்டக்காரருக்கு 50 வயதாகிறது.. இவர்தான் தோட்டத்தை இத்தனை வருடமும் பராமரித்து வந்துள்ளார்.. பூக்கள் மலர்வதற்கு தட்பவெப்பநிலையும் ஈரமும் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.. ஆனால், இந்த முறை இயற்கை குறைபாடு இருந்துள்ளது..

6 மாதம் சிறை
மேலும் வடகொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. அதனால், இந்த மலர்ச்செடிகள் அமைந்திருக்கும் தோட்டங்களை சரியாக பராமரிக்க முடியவில்லை என தெரிகிறது. இதையெல்லாம் கிம்மிடம் தோட்ட பணியாளர்கள் விளக்கி உள்ளனர்.. ஆனாலும், டியூட்டிக்கு ஒழுங்ககாக வராததால்தான் பூக்கள் பூக்கவில்லை என்று கடும் கோபத்தை காட்டி, அவர்களை 6 மாத காலத்திற்கு தொழிலாளர் முகாமில் சிறை வைத்துவிட்டார் கிம்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications