For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது கொரோனாவா?.. எங்க நாட்லயா?.. சான்ஸே இல்லே.. கேட்டையே இழுத்து மூடிட்டோமே!.. கிம் ஜாங் உன்

Google Oneindia Tamil News

பியாங்கியாங்: வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. சுமார் 190 நாடுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் பரவியது.

இந்த வைரஸ் நுழையாத நாடுகளே இல்லை என சொல்லும் அளவுக்கு வேகமாக பரவியது. எனினும் சில சிறிய பழங்குடியினர் இருக்கும் நகரங்கள், மாநகரங்களில் இந்த வைரஸ் நுழையவே இல்லை.

கொரோனா தொற்று... ஜெட் வேகத்தில் முந்திச் செல்லும் ஆந்திரா.... கர்நாடகா!! கொரோனா தொற்று... ஜெட் வேகத்தில் முந்திச் செல்லும் ஆந்திரா.... கர்நாடகா!!

வடகொரியா

வடகொரியா

பிரபலமான நாடுகளில் வடகொரியாவில் கொரோனா வைரஸே நுழையவில்லை என சொல்கிறார்கள். இதை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் வடகொரியாவில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

எல்லைகள்

எல்லைகள்

சீனாவில் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து ஜனவரியில் தலைநகர் பியாங்கியாங்கை சுற்றியுள்ள எல்லைகள் மூடப்பட்டன. ஆனால் அண்மைக்காலமாக உள்ளூர் மீடியாக்கள் இந்த வெளிப்படையான தகவல்களிலிருந்து விலகியே இருக்கிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

மாறாக தடுப்பு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உலகையே பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸால் எங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிக்கப்படாததற்கு பாடுபட்ட அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார் கிம் ஜாங் உன்.

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு நாட்டுமக்களிடம் தலைகாட்டாமல் இருந்தார். இதை வைத்து அவரது உடல் பருமனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின. மேலும் சிலர் அவர் கொரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி தலைமறைவாக பாதுகாப்பாக உள்ளார் என கூறியிருந்தனர்.

English summary
North Korea President Kim Jong Un says that there is no coronavirus in our country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X