மிரட்டும் நிமோனியா.. அதிகரிக்கும் சுவாச நோய்களுக்கு காரணம் இதுதான்.. உலக நாடுகளுக்கு சீனா ஆறுதல்
பீஜிங்: சீனாவில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை உலக சுகாதார நிறுவனமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் அதிகரிக்கும் சுவாச நோய்களுக்கு ப்ளூ மற்றும் அறியப்பட்ட நோய்க்கிருமிகளே காரணம் என்று சீனா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை ஒருசேர உலுக்கிய கொரோனா என்னும் பெருந்தொற்றை உலகம் தற்போதுதான் மறக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் பெரும் பொருளாதார இழப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திய கொரோனா தற்போது ஏறத்தாழ முற்றிலும் ஒழிந்து விட்டது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கிய நிலையில், சீனாவில் மீண்டும் பரவி வரும் நிமோனியா வகை காய்ச்சல் பாதிப்பு மக்களை பீதி அடைய வைத்தது.

அதாவது, சீனாவில் தற்போது எச்9என்2 எனும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நிமோனியா வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் எளிதாக தாக்கப்படுகின்றனர். எச்9என்2 வகை நிமோனியா காய்ச்சல் பரவல் குறித்து சீனாவை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது.
அதோடு இந்தியாவில் இந்த வகை பாதிப்பு இன்னும் கண்டறியப்படாத நிலையில் சீனாவில் இருந்து இங்கு பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது தேவையான ஒன்றாகும். இதனால் மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் இருப்பு, பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள் போன்ற மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு வெண்டிலேட்டர் செயல்பாட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதுமே சீனாவில் அதிகரிக்கும் இந்த நோய் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், தங்கள் நாட்டில் அதிகரித்து வரும் சுவாச நோய்க்கு ப்ளூ மற்றும் அறியப்பட்ட நோய்க்கிருமிகளே காரணம் என்று சீனா தெரிவித்துள்ளது. நோவல் வைரஸ் காரணம் கிடையாது என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:- சமீபத்தில் அதிகரித்து வரும் சுவாச நோய்க்கு பொதுவான வைரஸ்களான இன்புளுயன்சா வைரஸ், ரைனோவைரஸ், அடினோவைரஸ் ஆகியவையே காரணம் என்று கூறியுள்ளது. சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிக அளவு காய்ச்சல் முகாம்களை திறக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு சீன சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications