அந்த அடி அடித்த அமெரிக்கா! ஆனாலும் ஈரானுக்கு உதவ முன் வராதது ஏன்? ரஷ்யா கொடுத்த விளக்கம் இதுதான்
மாஸ்கோ: ஈரான் தற்போது பயன்படுத்தி வரும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எல்லாம் செய்ய சொல்லி கொடுத்தது ரஷ்யாதான். இவ்வளவு தொழில்நுட்ப உதவிகளை செய்த ரஷ்யா, ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டபோதும், ஈரானுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவாதது ஏன்? என்று கேள்வி எழுந்தது. இதற்கு ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
இஸ்ரேல் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ஈரான் ஷாஹெத் ரக ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. குறைவான உயரத்தில் பறந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த வகை ட்ரோன்கள் ரேடாரில் சிக்குவதில்லை. இதை வைத்துதான் ஈரான் ஆட்டம் காட்டி வருகிறது. இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை கொடுத்தது ரஷ்யாதான்.

நண்பேன்டா உறவு
அப்பேற்பட்ட நண்பேன்டா உறவு, இருந்தபோதிலும் ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அட்டாக் செய்யும்போது ரஷ்யா, ஈரானுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ரஷ்யா வரும், ஆட்டம் மாறும் என்றுதான் ஈரானும், அதன் ஆதரவு நாடுகளும் எதிர்பார்த்திருந்தன. அப்படி நடக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
விளக்கம் கொடுத்த ரஷ்யா
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இது குறித்து கூறுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிடம் எந்த இராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஈரானிடமிருந்து எந்த ராணுவ உதவி கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்று கூறிய அவர், எங்கள் நிலைப்பாடு ஏற்கனவே அனைவருக்கும் தெரியும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ரஷ்யாவுக்கும்-ஈரானுக்கும் இடையே ஒத்துழைப்பு குறித்த முக்கிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் ராணுவ உதவி குறித்து குறிப்பிடவில்லை. எனவேதான் ரஷ்யா இந்த விஷயத்தில் சைலண்டாக இருக்கிறது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்த ரஷ்யா, தாக்குதல்களை நிறுத்தும்படி வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications