துளிர்க்கும் நம்பிக்கை.. தூக்கு கயிற்றை எதிர்நோக்கும் குல்பூஷன்.. அப்பீலுக்கு அனுமதி தந்த பாகிஸ்தான்
குல்பூஷன் ஜாதவிற்கு கோர்ட்டுகளில் அப்பீல் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது
இஸ்லாமாபாத்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவிற்கு கோர்ட்டுகளில் அப்பீல் செய்யும் வாய்ப்பை பாகிஸ்தான் நாடாளுமன்றம் வழங்கி உள்ளது... இதையடுத்து அவருக்கு விடுதலைக்கான வாய்ப்பு உருவாக ஒரு வழி கிடைத்துள்ளது.
குல்பூஷன் ஜாதவ்.. 51 வயதாகிறது.. மும்பையை சேர்ந்தவர்... 10 வருடங்களுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர்... கல்யாணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன.
சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக, கடற்படையில் இருந்து ஜாதவ் விலகியதாகவும், ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கைது
கடந்த 2016ல் பாகிஸ்தானுக்குள் புகுந்து இவர், இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற புகாருக்கு ஆளானவர்..! அதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஒன்றான பலுச்சிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

ஈரான்
ஆனால், இந்த புகாரை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.. மேலும், குல்பூஷன் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் கடத்தி வந்துவிட்டதாகவும் குற்றச் சாட்டி வருகிறது. இந்தியாவின் பேச்சு எதுவுமே எடுபடவில்லை.. எனவே, இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவ்விற்கு கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது..

மறுஆய்வு
2019-ல் இந்த தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவானது.. ஆனால், அதற்குள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகி, அந்த தண்டனையை நிறைவேற்றுவதில் இருந்து தடை பெற்றது. இப்போது குல்பூஷன் ஜாதவ் கராச்சி ஜெயிலில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் 2019-ல் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய மறுஆய்வு மற்றும் மறு பரிசீலனை கட்டளையை, பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஏற்று மசோதா நிறைவேற்றியுள்ளது...

மேல்முறையீடு
அதன்படி, குல்பூஷன் ஜாதவ் தன்னுடைய தண்டனையை எதிர்த்து அங்குள்ள ஹைகோர்ட்களில் அப்பீலுக்கு போக முடியும்.. இந்த மேல்முறையீடு காரணமாக, குல்பூஷனுக்கு விடுதலை கிடைக்குமா என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், குல்பூஷன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும், இந்தியாவுக்கு லேசான நம்பிக்கை பிறந்துள்ளது.. பார்ப்போம்..!
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications