சிறிய துளையால் கவிழ்ந்த படகு.. தான்சானியாவில் கொடூர விபத்து.. 218 பேர் பலி!
தான்சானியாவின் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இதுவரை 218 பேர் பலியாகி உள்ளனர்.
டோடோமா: தான்சானியாவின் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இதுவரை 218 பேர் பலியாகி உள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் சிறிய நாடுதான் தான்சானியா. இந்த தான்சானியாவையும், உகாண்டாவையும் பிரிக்கும் வகையில் ஓடும் பெரிய ஏரிகளில் லேக் விக்டோரியா எரியும் ஒன்று.
இந்த நிலையில் இதுவரை அங்கு ஏற்படாத பெரிய விபத்து ஒன்று இந்த லேக் விக்டோரியாவில் ஏற்பட்டு இருக்கிறது. மக்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

எங்கு சென்றது
தான்சானியாவின் உகாரா பகுதியில் இருந்து புகலோராவை நோக்கி இந்த படகு சென்று உள்ளது. சுமார் 400 பயணிகள் இந்த படகில் சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏரியின் நடுவில் வரும் போது படகு அப்படியே நீரில் மூழ்கி இருக்கிறது.

நடந்தது என்ன
படகில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பயணிகளை ஏற்றிய காரணத்தால் இந்த ஓட்டை விழுந்து இருக்கிறது. தண்ணீர் உள்ளே புகுந்து அப்படியே படகு கவிழ்ந்து உள்ளது. மொத்தம் 400 பேரும் இதனால் நீருக்குள் மூழ்கினார்கள். கடந்த 20ம் தேதி இந்த சம்பவம் நடந்தாலும் இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

பலி எண்ணிக்கை
இந்த விபத்து காரணமாக மொத்தம் 218 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாரக்ள். 168 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

அதிர்ச்சி
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படகின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். படகை ஓட்டிய நபர் உயிர்பிழைத்துவிட்டார். அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications