தெருக்களுக்கு வந்த சுறாக்கள்.. தூக்கி வீசப்படும் வீடுகள்.. புளோரிடாவை புரட்டிப் போடும் பயங்கர புயல்!

Subscribe to Oneindia Tamil

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை 'லான்' புயல் துவம்சம் செய்து வருகிறது. புயலின் கோரத் தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் காற்றில் பறந்தும், வெள்ளத்தில் அடித்தும் செல்லப்படுகின்றன. மேலும், கடலில் உள்ள சுறாக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் மழை நீரில் அடித்து வரப்படுவதால் பெரும் அச்சுறுத்தலாக சூழல் அங்கு நிலவுகிறது.

இந்தியாவை போல அல்லாமல் அமெரிக்காவை அடிக்கடி புயலும், சூறாவளியும் தாக்குவது வழக்கம். புவியியல் அமைப்பு காரணமாக அந்நாட்டுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுவும் நம் நாட்டில் வீசும் புயல்களை போல இல்லாமல் மிக சக்திவாய்ந்த புயல்களே அமெரிக்காவை தாக்கும்.

அதேபோல, வீடுகளையும், கார்கள் போன்ற வாகனங்களையும் கூட வானுயர கொண்டு செல்லும் சூறாவளிகளும் அமெரிக்காவை ஆண்டுக்கு இரு முறையாவது தாக்கிவிடும்.

அதிதீவிர புயல் 'லான்'

அதிதீவிர புயல் 'லான்'

அந்த வகையில், அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, மிகப்பெரிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் சில நாட்களுக்கு முன்பு அது புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு'லான்' எனப் பெயரிடப்பட்டது. வழக்கமான புயல் தானே என அமெரிக்கா எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், அது மிக அதிதீவிர புயலாக வலுவடைந்தது. மேலும், புளோரிடாவை இது கடுமையாக தாக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரித்தது.

கரையை கடக்கும் பயங்கர புயல்

கரையை கடக்கும் பயங்கர புயல்

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் பதற்றமடைந்த அமெரிக்க மத்திய அரசாங்கமும், புளோரிடா மாகாண அரசும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில், நேற்று மதியம், அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் புளோரிடாவின் தென்மேற்கு கடற்பகுதிக்கு அருகே உள்ள காயோ கோஸ்டோ நகரில் 'லான்' புயல் கரையை கடக்க தொடங்கியது. எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் புயல் கரையை கடந்து வருவதால், புளோரிடா மாகாணமே ஸ்தம்பித்து வருகிறது.

தூக்கி வீசப்படும் வீடுகள்..

தூக்கி வீசப்படும் வீடுகள்..

மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. அதுமட்டுமின்றி, மிக பலத்த மழையும் புளோரிடாவை சூறையாடி வருகிறது. இதனால் பல நகரங்களும், கவுன்ட்டிகளும் (மாவட்டங்கள்) முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். புயலால் பல நூறு மரங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான மின் கம்பங்களும், டிரான்ஸ்ஃபார்மர்களும் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் புளோரிடாவில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டு அந்த மாகாணமே இருளில் மூழ்கியுள்ளது.

தெருக்களில் சுற்றித்திரியும் சுறாக்கள்..

தெருக்களில் சுற்றித்திரியும் சுறாக்கள்..

மேலும், புயல் காற்றின் வேகம் காரணமாக கடல் நீரும் கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளில் புகுந்துள்ளன. இதனிடையே, பல்வேறு தெருக்களுக்கும், சாலைகளுக்கும் சுறா உள்ளிட்ட ஆபத்தான மீன்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளன. அவை சாலைகளில் மழை வெள்ளங்களில் ஓடி வருவதால் அச்சுறுத்தலான சூழல் நிலவுகிறது.

இதனிடையே, முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கான மக்கள், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு விட்டதால் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த புயல் நாளை வலுவிழந்து ஜார்ஜியா, தெற்கு கேரோலினா மாகாணாத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+