9/11 மீட்புப் பணியில் அசத்திய நாய் ‘பிரிட்னி’க்கு 16வது பிறந்தநாள்.. ராஜ மரியாதையுடன்!
நியூயார்க்: நியூயார்க்கி்ல் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது தரைமட்டமாகிப் போன இரட்டைக் கோபுரம் என்று அழைக்கப்படும் உலக வர்த்தக மையப் பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 100 நாய்களில் தனித்துவம் பெற்ற பிரிட்னி என்ற நாய் தனது 16வது பிறந்த நாளை சிறப்பு மரியாதையுடன் கொண்டாடியுள்ளது.
டெக்ஸாஸைச் சேர்ந்த நாய் இது. இந்த நாய் இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது தேடுதல் பணியில் சிறப்பாக ஈடுபட்டு பலரைக் கண்டுபிடிக்க உதவியது. இதனால் நியூயார்க் மக்களின் இதயத்தில் இதற்கு தனி இடம் கிடைத்தது.
அதேபோல பத்து வருடத்திற்கு முன்பு நியூ ஆர்லியான்ஸை சுழற்றியடித்த காத்ரீனா புயல் தாக்குதலின்போதும் மீட்புப் பணியில் ஈடுபட்டு அசத்தியது.

ஓய்வு...
தற்போது மீட்புப் படையிலிருந்து இது ஓய்வு பெற்று விட்டது. தற்போது டெக்ஸாஸில் தனது உரிமையாளருடன் அது வசித்து வருகிறது.

16வது பிறந்தநாள்...
இந்த நிலையில் பிரிட்னியின் 16வது பிறந்த நாளையொட்டி அதற்கு ராஜ உபச்சாரம் செய்து நியூயார்க் ஹோட்டல் ஒன்று கெளரவித்துள்ளது. அந்த ஹோட்டலின் உரிமையாளர் பிரிட்னியையும், அதன் உரிமையாளரையும் நியூயார்க்குக்கு வரவழைத்து தனது ஹோட்டலில் ஒரு நாள் தங்க வைத்து கெளரவம் செய்துள்ளார்.

சிறப்பு விருந்து...
இதையடுத்து பிரிட்னியும், அதன் உரிமையாளர் டெனிஸ் கார்லிஸும் நியூயார்க் வந்தனர். அவர்களுக்கு சிறப்பு விருந்து தரப்பட்டு கெளரவிக்கப்ட்டது. மேலும் அந்த நாய்க்கு கட் அவுட்களும் வைத்து அசத்தினர்.

புதிய நாய்ப்படை...
பலர் புடை சூழ அந்த நாய்க்கு சிறப்பு பிறந்தநாள் விருந்தும் தரப்பட்டது. அதற்கு கேக் உள்ளிட்டவையும் சாப்பிட வழங்கப்பட்டன. மேலும் அந்த நாயின் பெயரில் புதிய நாய்ப்படையும் உருவாக்கப்பட்டு, அதுவும் தொடங்கி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications