உலகை உலுக்கும் லிபியா பேரழிவு: "பெரும்" சுனாமி வெள்ளம்..கடலுக்குள் புதைந்த மக்கள்- 20,000 பேர் பலி!
டெர்னா: லிபியாவில் பெரும் சுனாமி போல ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில் அதிர்ந்து போயிருந்தது.

இந்நிலையில் லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை துவம்சம் செய்தது. இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கிய டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்கள் அடையாளமே தெரியாமல் அழிந்து போயின.
லிபியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6,000. மேலும் 10,000 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. பெருவெள்ள ஆறானது மனிதர்களை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் வீசியதாம். இதனால் டெர்னா நகரை ஒட்டிய கடலுக்குள் தேடும் இடமெல்லாம் மனித உடல்களாக சிதறி கிடக்கிறது என அதிருகின்றனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்.
லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து போட்டி அரசாங்கங்கள் நடைபெறுகின்றன. இதனால் லிபியா மீட்பு பணியில் சர்வதேச நாடுகளின் உதவிகள் சென்றடைவதில் சிக்கல் தொடருகிறது. நமது இந்தியாவும் லிபியா மீட்புப் பணிகளில் உதவுவதாக உறுதி அளித்துள்ளது.
மேலும் லிபியாவில் ஐநா சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன; ஆனால் வெளிநாடுகளில் இருந்து மீட்பு பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவதன் மூலமே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுமை அடையச் செய்ய முடியும் என்கிற ஆதங்கத்தையும் தன்னார்வலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே டெர்னா நகர மேயர் Abdulmenam al-Ghaithi டிவி பேட்டி ஒன்றில், லிபியா பெருவெள்ளத்தில் மொத்தம் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என அச்சப்படுவதாக கூறியிருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications