விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப் பிரதமர் அப்துல்-ஹமீத் திபைப் தனது பேஸ்புக் பக்கத்தில் இச்செய்தியை உறுதிப்படுத்தினார். நாடு திரும்பி கொண்டிருந்த இத்தூதுக்குழுவுக்கு நிகழ்ந்த துயரச் சம்பவம் பெரும் இழப்பு என்று, அவர் வருத்தம் தெரிவித்தார். மேற்கத்திய லிபியாவின் உயர்மட்டத் தளபதியான அல்-ஹத்தாத், ஐ.நா. உதவியுடன் லிபிய இராணுவத்தை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

லிபியாவின் தரைப்படைத் தலைவர் ஜெனரல் அல்-ஃபித்தோரி கிராய்பில், இராணுவ உற்பத்தி ஆணையத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூத் அல்-கடாவ், தலைமை அதிகாரியின் ஆலோசகர் முகமது அல்-அசாவி தியாப், மற்றும் இராணுவப் புகைப்படக் கலைஞர் முகமது உமர் அஹ்மத் மஹ்ஜூப் என 4 முக்கிய அதிகாரிகள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.
லிபியக் குழு, இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த உயர்மட்டப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக துருக்கிக்கு வந்திருந்தது. இந்த குழு வந்த ஃபோல்கன் 50 ரக வர்த்தக ஜெட் விமானம் அங்காரா எஸ்என்போகா விமான நிலையத்திலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 40 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தின் சிதைவுகள் அங்காராவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தெற்கேயுள்ள ஹேய்மனா மாவட்டத்தின் கெசக்காவக் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications