சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: பலியான மலேசிய தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளா ராஜேந்திரன்!
கோலாலம்பூர்: உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்று தெரிய வந்துள்ளது.
ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன் என்ற அந்த 30 வயதுப் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர் பிரமீளா என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

சீனப் பத்திரிகை வெளியிட்டது
சீன மொழியில் வெளியாகும் மலேசிய நாளிதழ் சின் சியூ சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த 15 ஊழியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விவரத்தையும் அது கூறியுள்ளது.

280 பயணிகள்
இந்த விமானத்தில் மொத்தம் 295 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 280 பேர் பயணிகள் ஆவர். 15 பேர் பைலட் உள்ளிட்ட ஊழியர்கள் ஆவர்.

2 கேப்டன்கள்- 2 துணை கேப்டன்கள்
இந்த விமானத்தில் 50 வயதான வான் அமர்ன் பின் வான் ஹூசேன், 45 வயதான ஈஜின் சூ ஜின் லியோங் ஆகியோர் கேப்டன்களாகப் பணியில் இருந்துள்ளனர். அதேபோல 29 வயதான அகமது ஹக்கிமி பின் ஹனாபி, 27 வயதான முகம்மது பிர்தோஸ் அப்துல் ரஹீம் ஆகியோர் துணை கேப்டன்களாக இருந்துள்ளனர்.

ஊழியர்கள்
பிற விமான ஊழியர்கள் - 54 வயது முகம்மது கபார் பின் அபு பக்கர், 47 வயதான பெண் டோரா ஷமீளா பிந்தி காசிம், 41 வயது பெண் அஸ்ரின பிந்தி யாக்கோப், 42 வயதுப் பெண் லீ ஹூயி பின், 40 வயதுப் பெண் மஸ்தூரா பிந்தி முஸ்தபா, 40 வயதுப் பெண் சோங் யீ பெங், 31 வயதுப் பெண் நூர் சஸானா பி்ந்தி முகம்மது சலே.

தமிழ்ப் பெண் ஏஞ்செலின் பிரிமீளா ராஜேந்திரன்
தமிழ்ப் பெண்ணான ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரனும் பயணித்தவர்களில் ஒருவர். இவருக்கு 30 வயதாகிறது. விமான ஹோஸ்டஸாக இருந்துள்ளார். இவருக்கு சிறு வயதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்பதுதான் கனவாம்.

கனவு கருகிப் போன பரிதாபம்
ஆனால் ஏஞ்செலின் கனவு இப்படி வானிலேயே கருகிப் போய் விட்டது அவரது குடும்பத்தினரையும், உறவுகளையும் பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

சீக்கிய ஊழியர்
இதேபோல 41 வயதான சஞ்சித் சிங் சந்து என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய சீக்கிய ஊழியரும் இந்த விமானத்தில் இருந்துள்ளார்.

மற்ற ஊழியர்கள்
44 வயதான ஷேக் முகம்மது நூர் பின் முகம்மது, 42 வயதான பெண் ஹம்சபலின் ஷாம் பிந்தி முகம்மது ஆரிப்பின், 31 வயதான பெண் நூர் சஷானா பிந்தி முகம்மது சலே ஆவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications