For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டனில் அதிசயம்.. கால் புற்றுநோயை சரி செய்ய சிறுமிக்கு செய்யப்பட்ட வித்தியாசமான ஆப்ரேஷன்

லண்டனில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கால் பகுதி ஆப்ரேஷன் செய்யப்பட்டு, மொத்தமாக திருப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கால் புற்றுநோயை சரி செய்ய சிறுமிக்கு செய்யப்பட்ட வித்தியாசமான ஆப்ரேஷன்

    லண்டன்: லண்டனில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கால் பகுதி ஆப்ரேஷன் செய்யப்பட்டு, மொத்தமாக திருப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சிறுமிக்கு ஒரு கால் முன்பக்கம் பார்த்தும், மற்றொரு கால் பின்பக்கம் பார்த்தும் இருக்கிறது.

    எமிலியா என்ற அந்த சிறுமி, தற்போது இரண்டாம் வகுப்புதான் படித்து வருகிறாள். கால் எலும்புகளுக்கு அருகே உள்ள பகுதியில் புற்றுநோய் செல்கள் உருவானதால், எலும்பு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து இருக்கிறது.

    ஆனால் டாக்டர்கள் இந்த வித்தியாசமான சிகிச்சையை கொடுத்து அந்த குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்கள். கால்களை திருப்பி வைத்ததன் மூலம் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    என்ன நோய்

    என்ன நோய்

    லண்டனை சேர்ந்த எமிலியாவிற்கு சரியாக ஒருவருடத்திற்கு முன் எலும்புகளில் ஏற்படும் ஒருவகை புற்றுநோயான ஆஸ்டியோஜெனிக் சார்கோமா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாளுக்கு நாள் இந்த காலின் பகுதி வீங்கி கொண்டே சென்றுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக காலில் பாதி பகுதியில் பரவியுள்ளது.

    கால்களை எடுக்க வேண்டும்

    கால்களை எடுக்க வேண்டும்

    இதனால் அந்த சிறுமிக்கு காலை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காலை நீக்கவில்லை என்றால் அந்த நோய் உடல் முழுக்க பரவ வாய்ப்பு இருக்கிறது, அது குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் காலை எடுக்காமலே புதிய சிகிச்சை மூலம் நோயை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர். காலை திருப்பி வைக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    மாற்றினார்கள்

    மாற்றினார்கள்

    இதையடுத்துதான் அந்த குழந்தைக்கு கால் பகுதியை திருப்பி வைத்து இருக்கிறார்கள். முதலில் நோய் பாதிக்கப்பட்ட எலும்பு பகுதிகளை எடுத்துள்ளனர். பின் மீதம் இருக்கும் கால் எலும்பை முட்டி எலும்புடன் திருப்பி எதிர்திசையில் வைத்து ஆபரேஷன் செய்துள்ளனர். இதனால் கால் அளவு சிறியதாகும். இதை சரிசெய்யவே கால் பகுதியை திருப்பி எதிர்திசையில் வைத்து இருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    நன்றாக இருக்கிறார்

    நன்றாக இருக்கிறார்

    தற்போது எமிலியா நன்றாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மருத்துவர்களின் இந்த வித்தியாசமான ஐடியாவை கேட்டு முதலில் எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஆனால் தற்போது எமிலியா நன்றாக நடக்கிறாள் என்று அவரின் தந்தை ராபர்ட் தெரிவித்து இருக்கிறார். சில சமயங்களில் மட்டும் கஷ்டப்படுவதாகவும், போக போக அதுவும் பழகிவிடும் என்று எமிலியா கூறியுள்ளார்.

    English summary
    London doctors operated a 7-year-old girl's leg and reattached in opposite direction. They did this to cure her Osteosarcoma, which is the most common type of bone cancer in children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X