கை விரிக்கும் ரஷ்யா.. திணறும் ஐரோப்பா! ஏசியை 27 டிகிரி கீழ் வைத்தால் கூட கைதுதான்.! ஏன் தெரியுமா
மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு செய்வது அறியாமல் திணறி வருகிறது.
உக்ரைன் போர் இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உலக நாடுகளுக்கு மற்றொரு ஷாக்காகவே இருந்தது.
இந்தப் போர் முதலில் சில நாட்களில் இல்லையென்றால் அதிகபட்சம் சில வாரங்களில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது பல மாதங்களைக் கடந்த சென்று கொண்டு இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள்
உக்ரைன் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்தன. ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான பொருளாதாரத் தடைகளை விதித்தன. கேஸ் சப்ளேவுக்கு பெரும்பாலும் ரஷ்யாவையே நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இது சிக்கலையே கொடுத்தது.

ஏசி கட்டுப்பாடு
ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை காரணமாக வெப்பம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளனர். கேஸ் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடும் நிலவுவதால் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் நாட்டில் உள்ள அலுவலகங்கள், கடைகள், பார்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 27 டிகிரி செல்சியசுக்கு கீழ் ஏசியை குறைக்கக் கூடாது என்ற விதியை ஸ்பெயின் கொண்டு வந்துள்ளது.

குளிர் காலத்திலும்
இதற்கான அரசாணை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அதேபோல குளிர்காலத்தில் 19 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பத்தை அதிகரிக்க எந்தவொரு மின் சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் இதில் கூறப்பட்டு உள்ளது. எரிசக்தியைச் சேமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

டையை கூட கழற்றுங்கள்
இது தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில், "எரிசக்தியை நாம் கண்டிப்பாகச் சேமிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். வெப்பம் அதிகமாக இருந்தால் ஆபீஸில் டையை கூட ஊழியர்கள் கழற்றி வைத்துக் கொள்ளலாம். இதையே தான் நான் அமைச்சர்களிடமும் கூட கேட்டுக் கொண்டேன்" என்றார். இருப்பினும், அரசின் இந்த உத்தரவு பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

என்ன காரணம்
அதிகரிக்கும் வெப்பம், எரிசக்தி கொள்முதலில் இருக்கும் சிக்கல் என இரு பிரச்சினைகளை ஐரோப்பிய நாடுகள் இப்போது எதிர்கொண்டு உள்ளன. இத்தனை ஆண்டுகளாக ரஷ்யாவையே எரிசக்திக்கு நம்பி இருந்துவிட்டு, இப்போது அதை உடனடியாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் இதுபோன்ற உத்தரவுகளைப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன

மற்ற ஐரோப்பிய நாடுகள்
கீரீஸ், இத்தாலி நாடுகளிலும் கடந்த மதம் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுக்கட்டிங்களில் 27 டிகிரிக்கு கீழ் வெப்பத்தைக் குறைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது. பிரான்ஸ் நாட்டிலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் ஏசி கட்டுப்பாடுகளுக்கு விதிக்கப்பட்டு உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications