For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலை செய்வது எப்படி?: இன்டர்நெட்டில் ஆய்வு செய்த ஜெர்மன்விங்ஸ் துணை விமானி

By Siva
Google Oneindia Tamil News

டுசல்டார்ப்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி லுபிட்ஸ் இணையதளத்தில் தற்கொலை செய்யும் முறைகள் பற்றியும், விமானி அறைக் கதவின் பாதுகாப்பு முறை பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

ஸ்பெயினில் இருந்து 150 பேருடன் ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு சென்ற லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸுக்கு சொந்தமான விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 150 பேரும் பலியாகினர்.

விசாரணையில் ஜெர்மனியைச் சேர்ந்த துணை விமானியான ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) திட்டமிட்டு விமானத்தை விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்தது.

தற்கொலை

தற்கொலை

லுபிட்ஸின் வீட்டில் சோதனை செய்தபோது கிடைத்த டேப்லெட்டில் அவர் இணையதளத்தில் எதை எதை எல்லாம் ஆய்வு செய்தார்(browsing history) என்ற தகவல் இருந்தது. லுபிட்ஸ் தற்கொலை செய்யும் முறைகள் மற்றும் விமானி அறைக் கதவின் பாதுகாப்பு சிஸ்டம் குறித்து இணையதளத்தில் ஆய்வு செய்தது தெரிய வந்துள்ளது.

கண் பார்வை கோளாறு

கண் பார்வை கோளாறு

லுபிட்ஸ் கண்பார்வை கோளாறுக்காக சிகிச்சை பெர்று வந்துள்ளார். தனது மருத்துவர்களிடம் அவர் கண் பிரச்சனை காரணமாக தான் விடுப்பில் உள்ளதாக பொய் சொல்லியுள்ளார். அவர் உண்மையை தெரிவித்திருந்தால் அந்த மருத்துவர்கள் லுபிட்ஸின் நிலைமை பற்றி விமான நிறுவனத்திற்கு தெரிவித்திருந்திருப்பார்கள். விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2வது கருப்பு பெட்டி

2வது கருப்பு பெட்டி

ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து துணை விமானியின் செயல்கள் பற்றி மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகிறார்கள்.

ஜெர்மன்விங்ஸ்

ஜெர்மன்விங்ஸ்

லுபிட்ஸ் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் கடும் மன அழுத்தத்தால் அவதிப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஜெர்மன்விங்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

English summary
Germanwings flight co-pilot Lubitz searched about suicide and cocpit door security systems in the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X