Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் - ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்.. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஈரான் - ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    டெஹ்ரான்: ஈரான் ஈராக் எல்லையில் உள்ள இலாம் என்ற நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (6.3 ரிக்டர்) தாக்கியது. இதில் ஈரான், ஈராக்கில் உள்ள பல நகரங்கள், குவைத் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. இ்நத நிலநடுக்கத்தில் 200 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானில் உள்ள இலாம் நகருக்கு 114 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 65 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஈரான்- ஈராக் எல்லைப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதே இடத்தில்தான் கடந்த ஆண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

    Magnitude 6.3 earthquake strikes western Iran, No fatalities reported

    இந்த நிலநடுக்கத்தை ஈரானின் எல்லைப் பகுதி நகரங்கள், ஈராக் தலைநகர் பாக்தாத், எர்பில் உள்ளிட்ட நகரங்கள் உணர்ந்துள்ளன. குவைத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    உயிர்ப்பலி குறித்து தகவல் ஏதும் இல்லை. அதேசமயம், ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்போல் இ சஹாப், கிலன் இ கர்ப் ஆகிய இரு நகரங்களில்தான் அதிகம் பேர் காயமடைந்துள்ளனர்.

    சர்போல் இ சஹாப், கிலன் இ கர்ப் ஆகிய இரு நகரங்களும் குர்திஷ் இன மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களாகும். இந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். 2003ல் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தில் 26,000 பேர் பாம் என்ற நகரில் கொல்லப்பட்டனர்.

    கடந்த ஆண்டு 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல கட்டடங்கள் இடிந்தன. 600க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சாக்ரோஸ் மலைத் தொடருக்கு மத்தியில் உள்ள பிராந்தியம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+