சிலி: 8.1 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி, சுனாமி எச்சரிக்கை- 300 பெண் கைதிகள் எஸ்கேப்

சிலி நாட்டில் உள்ள இக்யூக் நகரின் வடகிழக்கில் 99 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 8.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த இடத்தில் கடந்த 2 வாரங்களாக பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடல் அலைகள் 6.5 அடி அளவுக்கு உயர்ந்து வந்து ஊருக்குள் நீர் புகுந்தது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல வீடுகள் சேதமடைந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கியும், மாரடைப்பு ஏற்பட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன, தீ விபத்துகள் ஏற்பட்டன. நிலம் குலுங்கியதில் விமான நிலையம் ஒன்று சேதம் அடைந்தது. மேலும் கடற்கரையோரம் உள்ள உணவகத்தில் தீப்பிடித்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இக்யூக் நகரில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து 300 பேர் தப்பியோடினர். உடனே ஒரு விமானத்தில் சிறப்பு படையினரை சிலி ராணுவம் அனுப்பியது. அந்த படையினர் 40 பெண் கைதிகளை பிடித்து அழைத்து வந்துவிட்டனர்.
கடந்த 2010ம் ஆண்டு மத்திய சிலியில் 8.8 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications