சூடுபிடிக்கும் மலேசிய பிரதமர் தேர்தல்... எதிர்கட்சிகளின் வேட்பாளராக மஹதிர் முகமது தேர்வு!
மலேசிய பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளராக மஹதிர் முகமது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளராக மஹதிர் முகமது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். வருகின்ற ஏப்ரல் மாதம் அங்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஆளும் அரசுக்கு எதிராக மலேசியாவில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது அடுக்கடுக்காக நிறைய குற்றச்சாட்டுக்கள் வந்து இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது நடக்க இருக்கும் தேர்தல் அதிக எதிரிபார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டு
மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது தற்போது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அபகரித்துவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது . மேலும் இதை அவர் தனது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒன்று சேர்ந்தது
இந்த நிலையில் இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தது. அவரை தேர்தலுக்கு முன்பாக பதவி விலக சொன்னது. தற்போது ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நான்கு எதிர்க்கட்சிகளும் சேர்ந்து முன்னாள் பிரதமர் மஹதிர் முகமதுவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

பிரதமர்
பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுக்கும் மஹதிர் முகமதுக்கும் நீண்ட நாட்களாக இருந்த பகை இந்த தேர்தல் மூலம் சரியாகி இருக்கிறது. அன்வர் தற்போது ஜெயிலில் இருக்கிறார். ஆனாலும் அவர் தனது ஆதரவை மஹதிருக்கு வழங்கி உள்ளார். எனவே இது இவருக்கு பெரிய பலமாக மாறியுள்ளது.

வாய்ப்பு இல்லை
மேலும் துணை பிரதமர் வேட்பாளராக அன்வரின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் வெற்றிபெற்ற பின் அன்வர் மீது இருக்கும் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெற குறைந்த வாய்ப்பே இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications